பாஸ் கட்சியுடன் அம்னோ பேசத்தாயார்

1 najibபாஸ் கட்சி பேசத் தாயார் என்றதால் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப்பை  சந்திக்கவுள்ளார்.  

கடந்த வார இறுதியில் நடந்த  பாஸ் முக்தாமாரில் (மாநாடு) இந்த சந்திப்பு சார்பாக விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இந்த சந்திப்புக்கு தான் தயார்  என்கிறார் நஜிப்.

“நாங்கள் திறந்த மனத்துடன் உள்ளோம், ஆனால் பாஸ் கட்சியின் விரிவானா நோக்கம் என்ன என்பதை பார்க்க வேண்டும்,” என்கிறார் நஜிப்.

பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் இஸ்லாமிய சட்டம் மற்றும் போதனைகளை செயல்படுத்தவும் இஸ்லாமிய ஐக்கியத்தை உருவாக்வும் அம்னோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை வேண்டும் என யோசனை கூறியிருந்தார்.

1993 ஆம் ஆண்டில், கிளந்தான் அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அமலாக்கம் செய்ய மத்திய அரசியலமைப்பில் திருத்தம் தேவைப்படுவதால் செயலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டது.

இது சார்பாக கருத்துரைத்த சுவராம் தலைவர் கா. ஆறுமுகம், இது மலாய்காரர் அல்லாதவரின் அரசியலுக்கு மிரட்டலை கொடுத்து பிழைப்பு நடத்தும் புளித்துப்போன கதை என்கிறார்.