மாநகரில் சேரும் குப்பையை அள்ளும் செலவு கூடிக் கொண்டே போகிறது. அதுதான் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்த முக்கிய காரணம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார்.
டிபிகேஎல் தலைமையகத்தில் செய்தியாளர்களீடம் பேசிய தெங்கு அட்னான், குப்பையின் அளவும் கூடி வருகிறது. அதை அள்ளும் செலவும் கூடி வருகிறது என்றார்.
“ஒவ்வொரு நாளும் கூட்டரசுப் பிரதேசத்தில் குப்பை சேர்கிறது, சேர்கிறது அவ்வளவு சேர்கிறது. ஆயிரமாயிரம் டன் கணக்கில் சேர்கிறது”, என்றாரவர்.
மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சு போடுகிறான். பில்லியன் கணக்கில் மக்களின் பணத்தை வில் போடுவதும் விரயமாக்குவதும் நிறுத்தினால் எல்லாம் முடியும். மக்களின் தலையில் மிளகாய் அரக்க தேவை இல்லை.
குப்பை என்று சொல்வது எதை.IC இல்லாமல் மற்றும் போலி IC போன்று வைத்துகொண்டு கோலாலம்பூரில் சுற்றி திரியும் வெளிநாட்டவரையா?இவர் பேசுவது நக்கல் செய்வது போல் இருக்கிறது.
அமைச்சரின் விளக்கம் அபாண்டம் ? எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு ? லட்சகணக்கில் பாகேட்டுக்குள் போனால் – டன் கணக்கில் குப்பைகள்தான் சேரும் , இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை . லட்சக்கணக்கில் வெளிநாட்டவர்கள் , அதிலும் பல்லாயிரம் கள்ளக்குடியேறிகள் கோடிக்கணக்கில் பணத்தை தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் என்ன வசூல் செய்யிறார் அமைச்சர் ? pop dancers வரவழைத்து மில்லியன் கணக்கில் கொள்ளை அடிக்கிறீர்களே அந்த பணத்தை குப்பை அல்ல செலவு செய்யுங்கள் ? NFC கொடுத்த பணம் வீணா போனதே , அதை வாங்கி செலவு செய்யுங்கள் ! ஏன் மொட்டை அடித்தவன் தலையையே மீண்டும் மீண்டும் மொட்டை அடிக்கிறீர்கள் ???