நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி) மீதான பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின் அறிக்கை ஒரு வாரம் தாமதித்து டிசம்பர் 3-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
முந்தைய பிஏசி தயாரித்திருந்த அந்த அறிக்கையை இப்போதைய பிஏசி கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று பிஏசி-இன் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நூர் ஜஸ்லான், இலக்குகளை அடையத் தவறிய அந்நிறுவனத்தின்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் பணம் போனது போனதுதான் ! எதுவும் நடக்கப்போவதில்லை !