நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் மலேசியாகினி கட்டிட நிதிக்காக Chilli Rush உணவகத்தில் நடைபெற்ற விருந்துக்கு 50-க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.
விருந்தில் கடந்த ஆண்டு செய்திநாயகி என்று மலேசியாகினியால் தேர்ந்தெடுத்துப் பாராட்டப்பட்ட அம்பிகா ஸ்ரீநிவாசன்தான் முக்கிய பேச்சாளர். அவர், நாட்டின் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக விளங்கும் பெர்சே-க்கு மூன்றாண்டுக் காலம் தலைவராக இருந்து வழிகாட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சுதந்திரமான ஊடகத்துக்கு ஆதரவு அளிப்பது அவசியம் என்று கூறிய அவர், அது சுதந்திரமான, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்றார்.
“மலேசியாகினி இல்லாத மலேசியாவை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை”, என அம்பிகா கூறினார்.
விருந்தில் மலேசியாகினி கட்டிட நிதிக்கு ரிம10,000 ரிங்கிட் திரண்டது.
செம்பருத்திக்கு கட்டிடம் இருக்க இல்லையா…………???????????
மலேசியாகினி மக்களுக்கு ,உண்மையான செய்திகளும் , அரசியல் விழிப்புணர்வும் , ஏற்படுத்தி மலேசிய மறுமலர்ச்சிக்கு பாடு பட்டமைக்கு நன்றிகள் பல . உங்கள் அயரா சேவையில் உயர்வு பெற்றவர்கள் எதிர்கட்சிகள் . உங்கள் அலுவளகம் , அவர்களே வாங்கி கொடுத்தாலும் தப்பில்லை .
நான் அன்றாடம் Malaysiakini-யைதன் முதலில் தட்டி பார்ப்பேன் காரணம் எனக்கு Malaysiakini-ல் வெளியாகும் பத்திரிக்கை செய்தி மீது அவ்வளவு நம்பிக்கை அட போங்கப்பா உண்மையா? எழுதறாணுங்க! இந்த பத்திரிக்கை காரணங்க எல்லாம் பொய்!!! ஆகவே நான் எல்லாம் இன்டர்நெட்டில் படிக்கிறேன் தமிழ் அழியாது ஆனால் சும்மா பொய் செய்தியை எழுதி பேர கேடுக்கறானுங்கப்பா இந்த தமிழ் பத்திரிக்கை வாங்கியவனும் இப்பொழுது வாங்க மறுப்பது உண்மைதான் நான் இப்பொழுது ஒரு தமிழ் பத்திரிக்கையும் ஆங்கில மலாய் பத்திரிக்கை வாங்குவதே இல்லை! உண்மையை போடுங்க நேர்மையா எழுதுங்க அப்புறம் நான் வாங்குகிறேன்!