ஜோகூர் மக்கள் மீது இஸ்லாத்தை வலிந்து திணிக்கக் கூடாது

excoஜோகூரில், வெள்ளிக்கிழமைகளில் விற்பனை மையங்களையும் கேளிக்கை மையங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு மூடி வைக்கலாம் என்று ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆயுப்  ரஹ்மாட்(வலம்)  முன்மொழிந்திருப்பதற்குக் கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் கவனம் வேறு திசைகளில் செல்லாமல் அவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உதவியாக இருக்கும் என்பதால் அவர் அப்படி ஒரு கருத்தை முன்வைத்தார் என செய்தித்தாள்கள் கூறின.

அதற்கு மறுப்புத் தெரிவித்த கெராக்கான் உதவித் தலைவர் டொமினிக் லாவ் ஹோ சாய், அது ஒரு தீவிரவாத கருத்து என்றார்.

“இஸ்லாமியமயத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது முஸ்லிம்-அல்லாதாரிடையே அச்சத்தை உண்டாக்கும். அதை அவர்கள் நிராகரிப்பார்கள். அது நாட்டுக்கும் பிஎன்னுக்கும் நல்லதல்ல”, என்றார்.

ஜோகூரில், அடுத்த ஆண்டிலிருந்து வெள்ளி-சனிதான் வாரஇறுதி விடுமுறை என்று  சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அறிவித்துள்ளது பற்றிக் கருத்துரைத்த லாவ், அது ஜோகூர் சுல்தானும் மாநில அரசும் செய்த முடிவு என்பதால் மதிப்பதாகக் குறிப்பிட்டார்.