சிலாங்கூரில் அரசு-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத் தலைவரான அஸ்மின் அலி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை இப்போது குறை சொல்கிறார். ஆனால், அது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அவர் எதுவும் பேசவில்லை என மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“அது விவாதத்துக்கு வந்தபோது அவர் (அஸ்மின்) அங்கிருந்தார். ஆனால், வாயைத் திறக்கவே இல்லை.
“இருவர் (செகின்ஞ்சான் பிரதிநிதி இங் சுயி லிம், கம்போங் துங்குவின் லாவ் வெங் சாங்கும்) மட்டுமே பேசினார்கள். வேறு எவரும் அதற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை.
“எனவே, இப்போது வந்து எங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்வது சரியல்ல”, என சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் தெங் சாங் கிம் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதை விடுத்து, நியாமான கருத்துக்கு வாருங்கள் . உங்களின் சம்பளம் மக்கள் வரிப்பணம். உங்கள் சேவைக்கு தேவையான் ஊதியம் பெறுவதும் ,எடுத்துக்கொள்வதும் அது உங்கள் உரிமைதான் . ஆனால் , நீங்கள் செய்வது சரியா ?? தவறா ?? மசாட்சியுடன் செயல்படுங்கள். மாற்றம் வந்தது – மீன்றும் மற்றொரு மாற்றம் வராது என்று எண்ணவேண்டாம் !!
சம்பள உயர்வுமீதான விவாதத்தின்போது அஸ்மின் மவுனமாக இருந்தது ஏன்? என்ன கேள்வி இது ??அஸ்மின் எப்படி ஐயா வாய திறப்பாரு ?சம்பளம் எதுரானுங்க்களா இல்லையா என்று இன்னும் முடிவேடுக்கவில்லையே ??இப்ப சம்பளம் ஏற்றிதாணுங்க புலி என்ற அச்மிம் பாயிந்து விட்டது ,,,,,,,,,
ஐந்து வருடமாகக் காப்பாற்றி நல்ல பெயரை கடந்த ஆறு மாதங்களாக மாநில பக்கத்தான் அரசு காற்றில் பறக்கவிட்டு வருகிறது. அடுத்த தேர்தலில் ஜெயிக்கிறோமோ இல்லையோ கிடைக்கற வரை சுருட்டிக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களே என்னவோ
சம்பளம் உயர்வு சரியான முடிவு ……நல்ல வருமானம் செலங்கோரில் ….லஞ்சம் இல்லாம…ஒரு நல்ல அரசாங்கம் அமைய வாழ்துவோம் ……
BN வருஷம் வருஷம் சம்பளம் போனஸ் கையுட்டு எல்லாம் உண்டு,நீங்கள் ஒரு முறைதான் oklah