பினாங்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் சம்பள உயர்வு. ஆனால், அது சர்ச்சைக்குரியதாக இருக்காது

1guanபினாங்கு சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களும் விரைவில் சம்பள உயர்வு பெறுவார்கள். அவர்களின் சம்பளம் 88 விழுக்காடு உயரலாம் எனத் தெரிகிறது. இதற்கான சட்டமுன்வரைவு அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

நடப்புச் சட்டமன்றக் கூட்டம் டிசம்பர் 17-இல் முடிவுக்கு வரும்போது முதலமைச்சர் லிம் குவான் எங் அதன் தொடர்பில் அறிவிப்பு ஒன்றைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் நடப்புச் சம்பளம் ரிம4,112.79. நிரந்தர அலவன்ஸ் ரிம2,000.

புதிய சம்பளத் திட்டம் ஏற்கப்பட்டால் சம்பளம் ரிம6,000 ஆகவும் அலவன்ஸ் ரிம5,000 ஆகவும் உயரும்.