-மு.குலசேகரன், நாடாளும்அன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2013.
குனோங் ராப்பார்ட் தமிழ்ப்பள்ளிக்கு நிலமும் மானியமும் ஒதுக்கப்பட்டும் இன்னும் அதற்கு விடிவு பிறக்கவில்லை என்று பெற்றோர்கள் முறையிட்டதாக இன்று (29-11-13) பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இதற்கு யார் காரணம் ?
2011இல் ஈப்போ லிட்டல் இந்தியாவில் தீபாவளி சந்தைக்கு வருகை புரிந்த போது அந்த அறிவிப்பைச் செய்தது கல்வி அமைச்சர் முகைதின் யாசினா அல்லது அன்று பேரா மாநில ம.இ.கா தலைவரும் பேரா மாநில முதல்வரின் ஆலோசகராகவும் இருந்த வீரசிங்கமா?
கல்வி அமைச்சர் தமிழ்ப்பள்ளிகளுக்கென நிலம் வழங்கி மானியம் வழங்குவதே பெரிய விஷயம். அப்படி வழங்கப்பட்ட இடத்தில் ஒதுக்கிய பணத்தைக் கொண்டு விரைந்து செயல் பாடாததற்கு முக்கிய காரணம் அன்றைய மாநில ம.இ.கா தலைவர் வீராதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் கொடுத்து பணம் ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் அதனை செயாலாக்கம் காண்பதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. தேசிய முன்னணி, அரசு தமிழ்ப்பள்ளிகளை இரண்டாம் தாரப் பிள்ளைகளைப் போலத்தான் நடத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார்தான் தமிழ்ப்பள்ளிகள் கட்டும் வேலையை முடுக்கிவிடுவது? ம.இ.காதான் தமிழ்ப்பள்ளிக்கும் மொழிக்கும் காவலன் என்று கூறிவருகிறது. அந்த ம.இ.காவின் பேரா மாநில பிரதிநிதியாக இருந்தவர்தான் வீரசிங்கம்.
அவர் காலத்தில் வழங்கப்பட்ட அந்நிலத்தில் அவர் பொறுப்புணர்ச்சியுடன் அங்கு கட்டிடம் வர முயற்சித்திருக்க வேண்டும். மாநில அரசில் அன்று பெரும் பொறுப்பு வகித்திருந்த அவர் அதில் அக்கறையும் விவேகமும் கொண்டிருந்தால் இன்று அந்த பள்ளி கட்டப்பட்டு, ஏறக்குறைய 300 மாணவர்கள் பயிலக்கூடிய இடமாக இன்று வளர்ந்திருக்கும்.
உடனடியாக சமுதாயத்திற்கும் இந்திய மாணவர்களுக்கும் நேரடியாகச் பயனளிக்கக் கூடிய இது போன்ற செயல்களில் அக்கறை கொள்ளாமல் 2000 ஏக்கரில் மட்டும் தீவிர கவனம் கொள்ளும் வீரசிங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர மாற்றம் தேவை. மக்களுக்கு எது எப்பொழுது தேவை என்பதை அவர் அறிந்திருந்தல் அவசியம்.
2000 ஏக்கரில் அவர் எடுத்த முயற்சியும், அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், ம.இ.காவின் தலைவர் ஜி. பழனிவேலு, அன்றைய மாநில சபாநாயகர் கணேசனின் அதிருப்தியை வெளிப்படையாகவே பெற்றிருந்த போதும், எதற்கும் செவி சாய்க்காமல் கொண்ட காரியத்திலேயே கர்மமாயிருந்து அந்த நிலத்தை மேம்படுவத்துவதற்கு ஒரு வாரியத்தையும் அமைத்து அதற்கென ஒரு அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார் .
இவ்வளவு வேகத்துடன் செயல்பட்ட வீரா ஏன் குனோங் ராப்பார்ட் தமிழ்ப் பள்ளி விஷயத்தில் ஒன்றுமே செய்யவில்லை?
இதே போன்ற நிலைமைதான் தைப்பிங்கிலுள்ள தாமான் காயாவில் தமிழ்ப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அற்கும் வீரா காலத்தில்தான் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த பள்ளியை கட்ட எந்த ஒரு முயற்சியும் அவர் எடுக்கவில்லை.
வீராவிற்கு மாநில அரசுடன் குறிப்பாக மாநில முதலமைச்சரிடம் நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருக்கிறது. அதனை அவர் முறையுடன் பயன்படுத்தி இன்று நினைத்தால் கூட அவரால் இந்த இரு தமிழ்ப்பள்ளிகளும் விரைவாக எழும்பிட உதவ முடியும்.
“நாம்தான் ம.இ.காவில் எந்த பொறுப்பிலும் இல்லையே, இனிமேல் தமிழ்ப்பள்ளிகள் நமது பொறுப்பல்ல” என்று வீரா தட்டிக்கழிக்கமாட்டார் என்று நம்புவோமாக. ஏனெனில், தமிழ்ப்பள்ளிகளுக்காக அவர் 2000 ஏக்கரை வளைத்துக்கொண்டு விழுந்து விழுந்து வேலை செய்வதுவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகத்தான் என்பதனை அவர் மறக்கக் கூடாது.
தம்பி குலசேகரா! எல்லாம் சரிதான், இந்த ம.இ.கா. குப்பைகளை எதிர்க்க மற்ற எதிர்க்கட்சி இந்தியர்களுக்கு உள்ள துணிச்சலில் சிறிதளவும் உம்மிடம் இல்லையே! வெறும் ‘அட்டை கத்தி’ [அறிக்கைகள்] யுடன் வம்பளப்பதே பிழைப்பாகிவிட்டது. பொதுத்தேர்தலில் எந்த ம.இ.கா. குப்பையுடனாவது மோதியதுண்டா? அமைச்சர் வீ.தி. சம்பந்தனோடு கா. அண்ணாமலையும்[1959] வீ.ராமையாவும் [1964,1969] மோதினார்கள். அமைச்சர் மாணிக்கவாசகத்துடன் ஜீ.வி. காத்தையா[1974] அமைச்சர் சாமிவேலுவோடு பி.பட்டு[1974,1990] டாக்டர் வீ.செல்லப்பன்[1982] ஆகியோர் மோதினர். துணையமைச்சர் டான்ஸ்ரீ சுப்ராவை பந்தாடினார் டாக்டர் வி.டேவிட்.[1978] . துணையமைச்சர் எஸ். கே. தேவமனிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் ஜே.சிம்மாதிரி[2004,2008] ஜி.பழநிவேலுவை மண்ணை கவ்வ வைத்திருப்பார் மா.மனோகரன். ஆனால், நீரோ, எந்த ஒரு ம.இ.கா. வினருடனும் மோதாமல், சீனர்கள் அதிகமுள்ள தொகுதிகளிலேயே குளிர் காய்ந்துக் கொண்டு, இந்த ம.இ.கா. காகிதப்புலிகளை சீண்டிக் கொண்டிருப்பது, வெட்கமாக இல்லையா?
பல்லு இல்லாத singam ,எண் Kula-vai சீண்டுரே, யார் சொன்னது மோதவில்லை என்று ? அடிக்கடி நாறிப்போன சிங்கம் படத்தை பார்த்தல் இப்படிதான் எழுத தோன்றும் ,,நீ என்ன இதுக்கு 1959,1964,1969,1974,1990,1978, 2004,2008 குப்பையுடன் மோதினார்கள் அல்லவா ,அப்பொழுது ஏன்னா மற்றம் கண்டது ??? குலா MIC குப்பைகளுடன் மோதியதை பற்றி முழுமையாக பத்ரிக்கை படிக்கவும், ரொம்ப சீரியல் பார்க்காதே பெண் சிங்கம்
அவர் சொல்லவந்த விசயத்தை பாரும், அதை விடுத்து குறைசொல்லியே காலத்தை ஓட்டவேண்டாம் (அ)சிங்கமே, சீனர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற குலசேகரன் தமிழருக்கும் தமிழ்பள்ளிக்குதானே போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் கொடுத்து பணம் ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் அதனை செயாலாக்கம் காண்பதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. தேசிய முன்னணி, அரசு தமிழ்ப்பள்ளிகளை இரண்டாம் தாரப் பிள்ளைகளைப் போலத்தான் நடத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார்தான் தமிழ்ப்பள்ளிகள் கட்டும் வேலையை முடுக்கிவிடுவது? ம.இ.காதான் தமிழ்ப்பள்ளிக்கும் மொழிக்கும் காவலன் என்று கூறிவருகிறது. ஆனால் அம்நோவிடம் நம் இனத்தையே அடமானம் வைத்துவிட்டது. இது நம் பிள்ளைகளின் எதிர்கால பிரச்சனை, அடுத்தவரை குறைசொல்வதை நிறுத்திவிட்டு ஒன்றுபடுவோம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மொழிக்கும் நம்மால் முடிந்ததை செய்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்இனம்.
உங்களின் போராடங்கள் வெற்றி பெற வாழ்துகள் ..எதையும் போராடித்தான் பெற வேண்டிய சூழ்நிலை …………..