புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டனவா? கெடா அரசு ஆராயும்

bujangஒரு மேம்பாட்டாளர், கெடா பூஜாங் பள்ளத்தாக்கில் விலைமதிப்பற்ற புராதனச் சின்னங்களை அழித்துவிட்டார் என்று கூறப்படுவதை  மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள் கொண்டு ஆராயப்படும். மாநில கலை, பண்பாடு, பாரம்பரிய விவகாரங்கள் குழுத் தலைவர் அமினுடின் ஒமார் இவ்வாறு கூறினார்.

மேல்நடவடிக்கை எடுக்குமுன்னர் பாதிக்கப்பட்ட பகுதி எதுவென்பதை அடையாளம் காண வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

பூஜாங் பள்ளத்தாக்கு ஒரு பரந்த நிலப் பகுதி என்பதால் அதை மொத்தமாக பாரம்பரிய சொத்து என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது முடியாத செயலாகும் என்றும் அமினுடின் மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.