மாநில கட்சித் தேர்தலில் அணிகளா? மறுக்கிறது பினாங்கு டிஏபி

dapபினாங்கு  டிஏபி தலைவராக  ஏழாவது தடவையாக பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சொள கொன் இயோ,  தம் “அணி”  மாநிலக் கட்சித் தேர்தலில் வென்றதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

“ஏதாவது ஓர்  அணியை உங்களால் பெயர் குறிப்பிட முடியுமா?  அணிகள் என்பதெல்லாம் ஊடகங்களின்  அனுமானம்தான்”, என்றாரவர்.

“தேர்தல் முடிவு  எல்லா ஐயங்களையும் தெளிவுபடுத்தி இருக்கும். கட்சியில் ஒரே அணிதான் உண்டு. அது டிஏபி அணி”, என்றவர் கூறினார்.