மகாதிர் பெட்ரோனாஸ் ஆலோசகர் பணியைத் துறந்தார்

dr mமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்(88),  பெட்ரொனாஸ் ஆலோசகர்  பதவியிலிருந்து  விலகிக் கொண்டிருப்பதாக உத்துசான் மலேசியா  அறிவித்துள்ளது.

வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ளும்  நோக்கில் அவர் பதவி விலகியதாக அம்னோவுக்குச் சொந்தமான  அந்த நாளேடு  தெரிவித்தது.

மகாதிர்,  யுனிவர்சிடி டெக்னோலோஜி பெட்ரோனாஸ் வேந்தர் பதவியிலிருந்தும் விலகினாரா  என்பதை அது தெரிவிக்கவில்லை.

2003, அக்டோபர் 31-இல் பிரதமர் பதவியைத் துறந்த மகாதிர்,  லங்காவி மேம்பாட்டு வாரியம், புரோட்டோன் ஆகியவற்றின் ஆலோசகரும் ஆவார்.