‘பெரும் பணக்காரர்கள்’ மீதான புலன்விசாரணை மலேசியாவில் அதிகம், ஹாங்காங்கில் குறைவு

1-razaliaபணக்காரர்களின்   ‘பெரும் சொத்துக்கள்’  மீதான புலன் விசாரணை  என்று பார்த்தால்,   ஹாங்காங்கில் சுதந்திரமாக செயல்படும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தைவிட  மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)தான் அப்படிப்பட்ட விசாரணைகளை அதிகம் செய்கிறது.

பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார்.

1 wan junaidiஇதனிடையே,   உள்துறை துணை அமைச்ச ர் வான் ஜுனாய்டி துவாங்கு  ஜப்பார் (வலம்), முன்னாள் அவசரச் சட்ட(இஓ)க் கைதிகளுக்கும்  மற்ற குண்டர் கும்பல்களுக்குமிடையில்  நடக்கும் மோதல்கள்தான் வன்முறை சார்ந்த குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக்  காரணம் என்றார்.

“இஓ கைதிகள் விடுவிக்கப்பட்டதும்  தங்கள் பழைய இடங்களுக்குத்  திரும்பிச் செல்கிறார்கள். அவை மற்ற குண்டர்களின் கைகளில் இருக்கின்றன.  அதனால் இரு தரப்பினரும் மோதிக்கொள்கிறார்கள்……இடையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கிறார்கள்”.

நஸ்ருதின் ஹசன்( பாஸ்- தெமர்லோ) கேள்விக்கான பதிலில் வான் ஜுனாய்டி இவ்வாறு கூறினார்.