‘கலாச்சார காட்டுமிராண்டித்தனம்’ஏன்? நஜிப்பும் கெடா எம்பியும் விளக்கமளிக்க வேண்டும்

1-surenகெடாவில் பழங்கால இந்து கோயில் ஒன்று அழிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் மெளனம் சாதிக்காமல் விளக்கம் தர வேண்டும் என எதிரணி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜாங் பள்ளத்தாக்கில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயமொன்று அழிக்கப்பட்டதை அறிந்து நாடே அதிர்ச்சி அடைந்திருப்பதாக பாடாங் செராய் எம்பி, சுரேந்திரன் கூறினார்.

“ஒரு மேம்பாட்டாளர் அதை அழித்தது கலாச்சாரக் காட்டுமிராண்டிச் செயலாகும். அது தலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்ததற்கு இணையான ஒரு செயலாகும்.”, என்றாரவர்.