பூஜாங் பள்ளத்தாக்கு மேம்பாட்டு திட்டம்: உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு

bujangபூஜாங் பள்ளத்தாக்கில் சாந்தி சுங்கை பத்து அல்லது பூஜாங் பள்ளத்தாக்கு இடம் 11 என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு மேம்பாட்டாளருக்கு கெடா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கெடா மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் தாஜுல் உருஸ் முகமட் ஸைன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேம்பாட்டு வேலைகளை உடனடியாக நிறுத்தும்படி மேம்பாட்டாளர் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கெடா மந்திரிபுசார் முக்ரீஸ் மகாதீர் கூறினார்.

“இதற்குமேல் என்னால் எதுவும் கூற முடியாது ஏனென்றால் அங்கு என்ன நடந்து என்பது பற்றி எனக்கு முழு அறிக்கையும் தேவைப்படுகிறது. சுங்கை பத்துவில் என்ன நடந்தது என்பது குறித்து இருவிதமான தகவல்கள் இருப்பதால் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள நான் ஒரு கூட்டம் நடத்தப் போகிறேன். உண்மையான நிலவரத்தை நானே தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.