மேம்பாட்டாளர் வரலாறு அறியாதிருப்பது வியப்பளிக்கவில்லை

1 ngoகெடாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, நாட்டில் இந்து-புத்த சமயங்களின் கடந்தகால வரலாற்றை நினைவுறுத்தும் சின்னமாகும்.

மற்ற நாடுகளில் வரலாற்றுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாப்பார்கள். இங்கு நிலவரம் வேறு என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்க(மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறினார்.

மேம்பாட்டு நிறுவனமான செளஜானா சென்.பெர்ஹாட் அங்குள்ள ஓர் ஆலயத்தை தகர்த்தெறிந்தது என்றால் அது அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்பை அறியாதிருக்கிறது என்பதுதான் பொருளாகும். .

“இதற்குக் காரணம் நம் கல்விமுறைதான். அது நாட்டின் இஸ்லாமிய வரலாற்றைத்தான் கவனப்படுத்துகிறது. மற்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை”, என்றாரவர்.

பூஜாங் பள்ளத்தாக்கு இந்து-பெளத்த சமய வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல. அது மலேசிய பாரம்பரிய சொத்துமாகும் என பாரதிதாசன் வலியுறுத்தினார்.  அந்த அடிப்படையில் அதை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்,  இவ்விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.