டோனல்ட் லிம் மசீச துணைத் தலைவருக்குப் போட்டி

1 mcaமசீச உதவித் தலைவர் டோனல்ட் லிம்,  கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் அப்பதவிக்குப் போட்டியிடப் போவதை அறிவித்துள்ளார் . எனவே, இப்போது அப்பதவி அவ்விருவருக்குமிடையிலான நேரடி போட்டியாக மாறியுள்ளது.

லிம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது இது முதல் தடவை அல்ல. 2008-இலும் அவர் போட்டியிட்டார். ஆனால், அப்போது துணைத் தலைவராக இருந்த சுவா சொய் லெக்கிடம் தோற்றார்.