கைரி: ‘ஹிடுப் மலாயு’ முழக்கம் மட்டும் போதாது

1 khairமலாய் சமூகத்தை முன்னுக்குக் கொண்டு செல்லாமல் ‘ஹிடுப் மலாயு(வாழ்க மலாய் இனம்) என்று முழக்கமிடுவதால் எந்தப் பயனும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் எச்சரித்துள்ளார்.

“மலாய்க்காரர்கள் எப்படிப்பட்ட வாழ்கை வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?

“அவர்கள் வறுமையில் வாடுவதைவிட கெளரவத்துடன் வாழ்வதுதானே மேலானது. எனவே, நம் திட்டங்களின் விளைவும் அவை பயனானவையாக அமைவதும் முக்கியமாகும். வெறுமனே சுலோகத்தை முழங்கிக் கொண்டிருப்பதைவிட அது முக்கியமானது.” இன்று காலை அம்னோ இளைஞர் பேராளர் கூட்டத்தில் கொள்கையுரை ஆற்றிய கைரி இவ்வாறு கூறினார்.

 

TAGS: