பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
“ஜிஎல்சி உயர் பதவிகளுக்கு அம்னோ அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது”
மலாய்க்காரர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அம்னோ தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் என பல அம்னோ பேராளர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை மலாய் பொருளாதார கூட்டமைப்பு ஒன்று இன்று நிராகரித்துள்ளது. "அத்தகைய நடைமுறை அவசியம் இல்லை," என மலாய் பொருளாதார ஆலோசனை மன்றத்…
அம்னோ பேராளர்: ஜிஎல்சி நிறுவனங்கள் அம்னோ உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) உயர் பதவிகளுக்கு அம்னோ உறுப்பினர்களை நியமிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎல்சி நிறுவனங்கள் மலாய் சமூகத்துக்கு உதவி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என பொருளாதாரம் மீதான தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பேராக் பேராளர் இட்ரிஸ்…
ஷாரிசாட் விளக்கமளிக்க வேண்டும்,பேராளர்கள் வலியுறுத்து
அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் விவகாரத்தில் இரண்டு நாள்களுக்குமுன் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றார் என்ற போதிலும் பேராளர்கள் சிலர், அமைச்சரைத் தற்காத்துப் பேசுவது சிரமமாக உள்ளது என்றும் அவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரிடமிருந்து விரிவான விளக்கம் தேவை என்றும்…
“வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடம் திருப்பிக் கொடுங்கள்”
பிஎன் உறுப்புக் கட்சிகள் தங்களால் வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பினங்கு பேராளர் ஒருவரின் விருப்பம் இது. கட்சித் தலைவரின் தலைமையுரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட மூசா ஷேக் பாட்சிர், 2008-பொதுத் தேர்தலில் நின்று தோற்றவர்கள் தாங்கள் போட்டியிட்ட இடங்களைத் திரும்ப வெல்ல முடியாது…
முக்ரிஸ்: பக்காத்தான் புது ஏகாதிபத்தியவாதிகளின் கருவி
அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்குமானால் அந்நிய வல்லரசுகள் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் என அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கூறுகிறார். அவர் அம்னோ பொதுப் பேரவையில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். விரிவான நோக்கத்தைக்…
மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின்
அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின், டிஏபி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கைக் கொண்டது எனத் தாம் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டை தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தக் கட்சி இனவாதத் தன்மையைக் கொண்டது எனக் குறிப்பிட்ட அவர், தம்மை குறை கூறுகின்றவர்கள் "100 மடங்கு கூடுதலான இனவாதிகள்" என…
உதவித் தலைவர்கள் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள தயார்
தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில்லாதவர்கள் என்று கருதப்படும் அம்னோ தலைவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இதனைத் தெரிவித்த அம்னோ உதவித் தலைவர்கள் மூவரும், தங்கள் சேவை இனியும் தேவையில்லை என்று உறுப்பினர்களும் மக்களும் நினைத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தாங்கள் ஒதுங்கிக்கொள்ளத் தாயாராக இருப்பதாகவும் கூறினர். உதவித் தலைவர்களில் ஒருவரான…
நஜிப்: அம்னோ “புதிய ஆட்டக்காரர்களை” எதிர்கொள்ள வேண்டும்.
புதிய ஊடகங்கள் உட்பட அரசியல் வடிவமைப்பில் நுழைந்துள்ள புதிய ஆட்டக்காரர்களை அம்னோ உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்சிக்கு துயரம் காத்திருக்கிறது என அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். அம்னோ வரலாற்றில் மிகவும் கடுமையான பொதுத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்நோக்கியுள்ள வேளையில்…
நஜிப்: எ, பி, சி கட்சிகளை விட அம்னோ அதிக…
2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டு வரலாற்றிலும் அம்னோ வரலாற்றிலும் பல முக்கியமான அம்சங்களை எடுத்துக் காட்டியதுடன் எதிர்க் கட்சிகள் ஜனநாயாக ரீதியில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அம்னோ தனது தலைவர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்கு பெரும்…
கைரி: உளவுத்துறை அறிக்கை எல்லாம் தேர்தலில் வேட்பாளராக உதவாது
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அரசாங்க அமைப்புகளின் சாதகமான அறிக்கைகளைக் காண்பிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று கோலாலம்பூரில், புத்ரா உலக வாணிக மையத்தில், அம்னோ இளைஞர் பகுதிக் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றிய கைரி, தம்மை அணுகிய சிலர் அவர்களுக்குச் சாதகமான…
அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் கூறிய கருத்தைக் கத்தோலிக்க ஆயர்…
அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான், ஒர் எதிர்க்கட்சியை "கிறிஸ்துவ மயத்துக்கான ஏஜண்டுகள்" என கூறியுள்ள குற்றச்சாட்டு "அச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தை" கொண்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் பேராளர்கள் உணர்வுகளைத் தூண்டும்…
முஹைடின்: மலேசியாவைக் குடியரசாக்க டிஏபி முயலுகிறது
அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் பக்காத்தான் ராக்யாட் மீது வெளிப்படையான தாக்குதலை தொடங்கியதின் வழி அம்னோ பொதுப் பேரவை தொடங்கியுள்ளது. பக்காத்தான் செய்வது எல்லாம் மலாய் நலன்களுக்கு எதிரானவை என்று அவர் குற்றம் சாட்டினார். அவர் நேற்றிரவு அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் பேரவைகளைக் கூட்டாகத்…
நஜிப் அம்னோவிடம் சொல்கிறார்: திருந்துக அல்லது ஒர் அரபு எழுச்சியை…
அம்னோ சீர்திருத்த முயற்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரபு எழுச்சி பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அந்தக் கட்சியிடம் மன்றாடியிருக்கிறார். "நீங்கள் நீண்ட காலத்துக்கு எத்தகையை இடையூறும் இல்லாமல் ஆட்சியில் இருந்து விட்டால் அரசியலில் உங்களை யாரும் அசைக்க…