பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் ‘balik India, China’ (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா அலாம் தொகுதித் துணைத் தலைவர் ஏ பிரகாஷ் ராவ், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை தமது கருத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சொன்னார்.
அத்துடன் அந்தத் தலைமை ஆசிரியை ‘இந்தோனிசியாவுக்குத் திரும்பிச்
செல்லுமாறு” மலாய் மாணவர்களிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.
“வெள்ளிக் கிழமையன்று மாணவர்களைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் தலைமை ஆசிரியை வாக்குறுதி அளித்துள்ளார்,” என்றும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருகை அளித்த பின்னர் பிரகாஷ் சொன்னார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மாணவர்கள் கூச்சல் போட்டுக்
கொண்டிருந்ததால் தலைமை ஆசிரியை ஆத்திரமடைந்து அவ்வாறு சொன்னதாக சொல்லப்படுகின்றது.
ஏ பிரகாஷ் ராவ், எனக்கு கொஞ்சம் டௌட்டு…
1. இந்தியர்கள் இந்தியாவுக்கும், சீனர்கள் சீனாவுக்கும், இந்தோக்கள் அந்த ஊருக்கும் போய்விட்டால் இந்நாட்டு அமைச்சரவையில் யார் இருப்பார்கள். பங்களாக்களும், வியட்நாமியர்களுமா?
2.கொள்ளையிட்டு மாட்டிக்கொண்ட பின், மன்னித்துவிடச் சொன்னால் நீதிமன்றம் மன்னித்துவிடுமா?
3. தேசியகீதத்தின் மகிமையை மாணவர்களுக்கு எடுத்துரைக்கத் தெரியாதாவர்களெல்லாம் ஆசிரியர்களா?
4. சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மி_ _ காட்சி சாலையில் கூட வேலைசெய்யமுடியாது தெரியுமா?
நமது பிரதமர் ஒரே மலேசியா என்கிறார்! பிறகு நிங்கள் என்ன இந்த வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள்?
கொள்ளையிட்டு மாட்டிக்கொண்ட பின், மன்னித்துவிடச் சொன்னால் நீதிமன்றம் மன்னித்துவிடுமா என்ற குத்தூசியின் கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. மலேசியாவில் எதுவும் நடக்கலாம்.. எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக காசோலை ஏய்ப்பு வழக்கில் என்ன நடந்தது?? பணத்தை கொடுத்து விடுகின்றேன், பிரச்சனையை முடித்துக் கொள்வோம் என்றுதானே முடித்தார்கள்.. நான் செய்தால் திருட்டு.. பி என் காரர்கள் செய்தால் நிர்வாகத் தவறு..
நம்மினத்தை பிறர் எத்தனை முறை கேவலப்படுத்தினாலும் நம்ம அரசியல்வாதிகளுக்கு சொரனை வரமாட்டிங்குது! இன்னும் மழுப்பல் பதில்களையே சொல்கிறார்கள்!
மன்னிப்பு என்ற வார்த்தைக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது ! அரசியல், சமூகம், கட்சி, கழகம், ரோடு, வீடு எங்குபார்த்தாலும் அந்த புனித வார்த்தை சந்தையில் விற்கும் பொருளாகிவிட்டது ! இந்த ஒரு வார்த்தையை வைத்துகொண்டு “இறைவனையும்” பந்தாட துணிந்துவிட்டான் ஆறு அறிவு பெற்ற மனிதன் !! என்னடா உலகமிது ? சாக்கடையில் புரளும் பன்றிக்கும் தெரியும் தன் குட்டியை எப்படி பாதுகாப்பது என்று , ஆனால் அறிவு மேதைகளுக்கு பேசும் தன்மையே தலைகீழாக உள்ளதே !! யாவாராயினும் நா காக்க, ஆசிரியையே நா காக்க !!! யாருக்கு வேண்டும் உன் மன்னிப்பு ??
குத்தூசியின் கேள்வி நியாயமானது. பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் ஆசிரியைக்கும் அவரை ஆதரிப்பவர்களுக்கும் இருக்கிறது.
மற்ற இனத்தவர் செய்துவிட்ட தவறுகளுக்கு மட்டும் ஏன் மன்னிப்புக்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை??
பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் ’balik India, China’ (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா அலாம் தொகுதித் துணைத் தலைவர் ஏ பிரகாஷ் ராவ், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை தமது கருத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சொன்னார்.” இக்கூற்று உண்மை என்றால் மாண்புமிகு கமலநாதன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே ! சுமுதாயம் கவனித்துக் கொண்டே இருக்கிறது என்பதை அவர் அறிவாரா ? சிற்றுண்டிசாலை விவகாரத்தில் அவசர-அவசரமாக மூக்கை நுழைத்த அமைச்சர் இப்போது மௌனம் சாதிப்பது ஏன் !
நன்கு படித்த பள்ளி தலைமை ஆசிரியரே மாணவர்களை இப்படிச் சொன்னால்… சாமான்ய வேற்றின மக்கள் நம்மலை என்னவெல்லாம் திட்டுவாங்களோ…!
ஆனால் மலாய் மாணவர்களை நீங்கள் இந்தோனேசியா போங்கள் என்று சத்தமாக அவர் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனையே எழுருந்திருக்காதே! பிரகாஷ் ராவ் கொஞ்சம் இட்டுக்கட்டி சொல்லுவதாகவே தோன்றுகிறது. அப்படி சொல்லியிருந்தால் அங்கிருந்த மலாய் ஆசிரியர்கள் அவரை சும்மா விட்டிருப்பார்களா! வெள்ளிக்கிழமை அவர் மன்னிப்புக் கேட்கப் போவதையும் கொஞ்சம் போய் காதாரக் கேட்டுவிட்டு வாருங்கள்! அப்புறம் இதெல்லாம் தேச நிந்தனை என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தீர்களா?
நோர் ஒமாருக்கு போன் போட்டு சொல்லுங்க, இந்த தலைமை ஆசிரியரை பற்றி புகார் சொன்ன மாணவர்களை தேச நிந்தனை சட்டத்தில் விசாரிக்க சிபாரிசு செய்வாரா என்று? கமலநாதன் சார் தவற்றை ஒத்துக் கொண்ட அந்த தலைமை ஆசிரயர் எல்லா மாணவர்களையும் ஒட்டு மொத்தமாக பேசி இருக்கிறார், பரவாயில்லை கண்டும் காணமல் இருந்து விடுங்கள், வேதமூர்த்தி அண்ணன் அடுத்து உங்களுக்கு டத்தோ பட்டம் காத்து கிட்டு இருக்கு, நீங்க கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், பழனி சார் வாய தொரக்காதிர் நஜிப் கோவிச்சுக்குவார்.