கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகிய பாடங்களில் மாணவர்களின் தரம் குறித்து 65 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மலேசியா பெற்ற இடம் பெருமைப்படத்தக்கதாக இல்லை.
2012 அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுப் பட்டியலில் மலேசியாவால் 52வது இடத்தைத்தான் பெற முடிந்தது. தாய்லாந்துக்கு 50 வது இடம். சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் இடம் சீனா(ஷங்காய்)வுக்கு. உலக முழுவதும் 15-க்கும் 16-வயதுக்கும் இடைப்பட்ட 510,000 மாணவர்களிடம் அவர்களின் கணித, அறிவியல் அறிவையும் வாசிப்புத் திறனையும் மதிப்பிட அச்சோதனை நடத்தப்பட்டது.
மலேசியாவில் கல்விக் கொள்கை கலவிக் கொள்கையாய் மாற்றம் கண்டு வருகிறது. பின்னர் எப்படி தரம் உயரும்????
இன்னுங் கூட கீழே போகும், அம்னோ நீடித்தால்.
மலேசியாவின் கல்வி அமைச்சன் தரம் குப்பை தொட்டிக்கும் மலம் தொட்டிக்கும் சமம் .
மலேசிய கல்வி உலக தரம் வாய்ந்தது என மொகைதீன் சொல்லுறான் அதுக்கு ஒத்து பாடுறானுங்க கல்வி கல்ஞ்சியுமான மேதை கமலநாதன்., கல்வி அறிஞ்சன் இராஜேந்திரன் அப்புறம் எப்படி தரம் தாழ்ந்து போச்சி..?
கவலைப் படாதீர்கள்!. அடுத்த வருடம் நம் நாட்டு மாணவர்கள் நிச்சயம் இந்த அனைத்துலக தேர்வில் சிறந்த நிலையை அடைவார்கள். காரணம், இந்த வருட மத்தியில் இருந்தே சம்பந்தப் பட்ட அமைச்சின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை ஏற்படுத்தி தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு ரகசியமாக தேர்வு பயிற்சி நடத்திக் கொண்டு இருகின்றார்கலாம். அடுத்த வருட சோதனை முடிவு வெளிவந்தவுடன் அரசாங்க கூஜா தூக்கிகள் அஹா ஓஹோ என்று கதை பாட தயாராக இருகின்றார்கள்.
“குண்டுச்சட்டிகுல்லேயே குதிரை ஓட்டிகிட்டு இருந்தா” பின்னே எப்படி இருக்கும்? சம்பந்தப்பட்ட அமைச்சு நன்கு சிந்திக்க வேண்டிய நேரம் இது. கூடைக்குள்ளே உண்கார்ந்துகிட்டு தன்னை தானே தூக்கிகிட்டு இருக்கிற வேலை தானே மும்மரமா நடந்துகிட்டு இருக்கு! இந்நிலை மாற்றி… உண்மை நிலைக்கு வரும்போது தான் இந்நிலை மாற வைப்பு இருக்கு!
தாழ்ந்து போகவில்லை தலை குனிந்து இருகிறது…..ஒரு இனம் ஒரு மதம் என்று முழக்கம் ..தொட்டனை துறும் மனகேணி மாந்தருக்கு கட்டனை துறும் அறிவு ..கிணற்றை தோண்ட தண்ணிர் உறுவதை போல் படிக்க படிகத்தான் அறிவு வளரும் ..வள்ளுவரின் வாக்கு… ஆனல் இங்கே எதை படிபதென்று ஒரே குழப்பம்..கல்வியமைச்சரின் குளறு படியான என்னகளின் பிரதிபலன்கள் ….கல்வி கல்விஅமைச்சரின் கைகளில் …அதன் தரம் ஒரு கேள்விகுறிடன் 2014 பயணிக்க போகிறது …..
சீரியன், பேராசிரியர் இராஜேந்திரனை குறை சொல்லி புண்ணியமில்லை. அவருடைய கருத்தும் நம் கருத்துதான். ஆனால், அவர் அரசாங்கத்தைச் சார்ந்து நிற்பதால், அங்கிருந்து கொண்டே நம் இன மாணவர்களுக்கு என்னென்ன செய்ய முடியும் என்று யோசித்து களமிரங்குகின்றார். வெளியே இருந்து நாம் வெறுமனே கூப்பாடு போடுவதை விட, அவர் கல்வி அமைச்சுக்குள் இருந்துக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யட்டும். வெளிப்புற அழுத்தத்தை நாம் கொடுப்போம்.