வெள்ள அகதிகளிடம் மன்னிப்பு கேட்டார் துணைப் பிரதமர்

1 floodதுயர்துடைப்பு மையங்களுக்கு உணவுப்பொருள்கள் அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு துணைப் பிரதமர் முகைதின் யாசின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்டார்.

வெள்ளப் பெருக்கு இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றவர் விளக்கமளித்ததாக பெர்னா கூறியது.

திரெங்கானு, கெமாமான், பாயான் பெரெஞ்சூட்டில் துயர்துடைப்பு மையமாக செயல்பட்டும் பங்கோல் இடைநிலைப் பள்ளியில் முகைதின் பேசினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் திரெங்கானுவும் ஒன்றாகும்.

துயர்துடைப்பு மையங்களில் மூன்று நாள்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.