சில தரப்பினர் இடைத் தேர்தலில் குழப்பம் விளைவிப்பதற்காக ஒரு கூட்டத்தைத் தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அண்மையில் நடைபெற்ற சுங்கை லிமாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது அக்கூட்டத்தினர் தொல்லை கொடுத்தார்கள்.
அவர்கள் இடைத் தேர்தல்களில் குழப்பம் செய்து அவை நேர்மையாக நடத்தப்படவில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள் என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.
“அண்மையில் சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் அவர்களைப் பார்த்தோம். கோலா பெசுட் இடைத் தேர்தலிலும் அவர்கள் காணப்பட்டார்கள்.
“அவர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரம் இசி-க்கு இல்லை. போலீஸுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு”, என்றாரவர்.
அடுத்த முறை அவர்களை படம் பிடித்து EC போஸ்டரில் போடுங்கள். இதுவும் கூட போலீசார் செய்ய வேண்டும் என்று சொல்லி தண்டத்துக்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்து விடாதீர்கள் – எப்பொழுதும் செய்வது போல்.