நாட்டின் மூத்த எழுத்தாளரான வழக்கறிஞர் கி. சீலதாஸ் அவர்களின் ‘வருடிச் சூடிய வாழ்க்கைப் பூக்கள்’ என்ற நூல் வெளியீடு காண்கிறது.
சீலதாஸ் அவர்கள் தான் கண்ட உண்மைகள், படித்த வரலாறுகள், நினைவில் நிற்கும் சிந்திக்க வேண்டிய சம்பவங்கள் என தனது காலச் சுவடியில் பதித்த பதிந்தவற்றை தொகுத்துள்ளார். அரசியல், சமூகம், இலக்கியம், சட்டம், கல்வி, வாழ்க்கை, பொருளாதாரம், மொழி, மதம் இப்படிப்பட்ட பிரிவுகள் சாதரண மனிதர்களை ஆட்கொள்கிறது. மனிதன் அதனால் பாதிப்படைகிறான். அவையின் சார்பாக எழும் எதார்தமான கேள்விகளுக்கு விடைதேட சீலதாஸ் முயலும் போது அது அவரது நுண்ணிய படைப்பாக வெளிப்படுகிறது.
ஆழ்ந்த ஆழமான சிந்தனை, நிதானம், எதிர்வினைக்கான ஆயத்தம், அறிவு சார்ந்த ஆலோசனை – இப்படியாக விமர்சனமும கொண்ட ஒரு சிறந்த கண்ணோட்டமும் தெளிவும் கொண்ட அவர் எழுத்துக்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு கலங்கரை விளக்காக திகழும்.
இந்நூல் வெளியீடு டத்தோ வி.எல். காந்தன் தலைமையில் நடைபெறும். அந்நிகழ்வில் முனைவர் எம்.சுவாமிநாதன் நூல் ஆய்வு செய்வார், எம்.துரைராஜின் அணிந்துரை வழங்குவார் மற்றும் குமார் அம்மன் சிறப்புரை ஆற்றுவார்.
அனவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.
நாள்: 15.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணி. இடம்: குளுவாங் சிட்டி ஹோட்டல். தொடர்பு: 0137704214 / 0167063257
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விடிவெள்ளியாய் விளங்கும் உங்களின் நட்சேவைக்கு பாராட்டுகள் . ஆனால் ஒரு சில வாசகர்கள் புதிய புத்தக வெளியீடு என்றாலே அலர்ஜி ! புத்தக வெளியீடு என்பதை ஒரு வியாபாரமாக ,பணத்துக்காக செகிறார்கள் என்ற தப்பான எண்ணத்தில் விமர்சனம் செய்கிறார்கள். எழுதுப்படைப்பு என்பது மூலிகை கலந்த நீர்வீழ்ச்சி , வற்றாத அருவி , அள்ளிப்பருகிடவேண்டிய அமிர்தம் ! வேண்டும் என்பவர்கள் பருகலாம் – வேண்டாதவர்கள் ஒதுங்கலாம் ! கட்டாயமல்ல !! விமர்சனம் வேண்டாம் .