பினாங்கு அரசு குறைந்த, நடுத்தர விலை வீடுகளின் உரிமையாளர்கள், வாங்கிய ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் அவற்றை விற்பதற்குத் தடைபோட முடிவு செய்திருப்பதை பினாங்கு மலாய் காங்கிரஸ் குறைகூறியுள்ளது.
அதன் தலைவர் ரஹ்மாட் இஷாக், அம்முடிவு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பினாங்கு அரசின் நோக்கத்துக்கு முரணாக உள்ளது என்று கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“(வீட்டு உரிமையாளர்கள்) தங்கள் சொத்துக்களை வைத்து ஆதாயம் காண்பதை ஏன் தடுக்க வேண்டும்?”, என்றவர் வினவினார்.
அம்முடிவு, பினாங்கில் சொத்து விலை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தடுப்பதையும் உண்மையிலேயே வீடு வாங்க விரும்பும் குறைந்த- நடுத்தர- வருமானம் பெறும் மக்களுக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தையும் நோக்கமாகக் கொண்டது என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறி இருந்தார்.
குறைவான வருமானம் , ஏழ்மையான குடும்பம் என்று மலிவு விலை வீட்டை வாங்குவது ,பிறகு அதிக லாபத்திற்கு விற்றுவிட்டு , மீண்டும் நான் ஏழை , வருமானம் குறைவு என்று மலிவு வீட்டுக்கு விண்ணப்பம் செய்வது . இதுதானே அமனோகாரன் வேலை. இதில் பினாமி பேரில் ஒருவனுக்கு பல மலிவு வீடுகள் !! இந்த தில்லு முல்லுவை கட்டுப்படுத்தவே புதிய சட்டம் . காரணம் உண்மையான ஏழைக்கு மலிவு வீடுகள் போய்சேரவேண்டும் என்பதே மாநில அரசாங்க நோக்கம். ஏன், இதுதானே இப்போதைய நம் நாட்டுச் சட்டம் ?