பத்திரிகைகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாரி இறைத்துச் செலவு செய்வது பற்றியோ அவரின் துணைவியாரின் ஆடம்பர வாழ்க்கைமுறையைப் பற்றியோ விமர்சித்தால் தொல்லைதான் போலும்.
த ஹீட் வார இதழ் நவம்பர் மாதம் “அனைவர் கண்களும் வாரி இறைத்துச் செலவு செய்யும் நஜிப்பின்மீது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்பில் காரணம் கோரி உள்துறை அமைச்சு அதற்குக் கடிதம் எழுதியிருப்பதாக தெரிகிறது.
ஆனால், நஜிப், ரோஸ்மா பற்றி எழுதியதுதான் கடிதம் அனுப்பப்பட்டதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படவில்லை. கடிதம் எழுதப்பட்டது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மலேசியாகினி உள்துறை அமைச்சைத் தொடர்புகொண்டு வருகிறது.
த ஹீட் வார இதழ் எச்சிகே மீடியா குழுமத்தால் வெளியிடப்படுகிறது. அவ்வார இதழின் தலைமை ஆசிரியர் டேவிட் லீ பூன் சியு-வும் இது பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
ஆகா! நமது பத்திரிக்கைச் சுதந்திரம் சுதந்திரமாகச் செயல் படுகிறது!
மக்கள் பணத்தில் அவர்கள் நல்லா உல்லாசம் கொள்வது குறித்து இந்த ஹீட் பத்திரிக்கைக்கு என்ன தேவையில்லாத அக்கறை..?! மலேசியாவில் இது ஒரு பத்திரிகையின் வேலை அல்லவே…!
நாட்டு நடப்பையும் உலக நடப்பையும் எவ்வித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக மக்களுக்கு வெளிப்படுத்துவது ஒரு பத்திரிகையின் கடமை. பத்திரிகை சுதந்திரத்தை இது உணர்த்துகிறது.
சுயநலத்துக்காகவும் பதவிக்காகவும் வயிற்று பிழைப்பிக்காகவும் உண்மையை மறைத்து எழுதுவது பத்திரிகை அநீதி…..