பினாங்கு சட்டமன்றத்தில் ஓர் ஆச்சரியம். அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பரம வைரிகளான முதலமைச்சர் லிம் குவான் எங்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சம்பள உயர்வு பெறுவதற்கு ஆதரவு அளித்தனர்.
சம்பள உயர்வுமீதான விவாதத்தில் பேசிய முகம்மட் பாரிட் சாஆட் (பிஎன் -பூலாவ் பெத்தோங்), லிம்முக்கு எல்லாச் சட்டமன்ற உறுப்பினருக்கும் கிடைக்கும் 88 விழுக்காடு உயர்வுடன் 10 விழுக்காடு கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
“சிஎம் கடுமையாக உழைக்கிறார். கூட்டங்களுக்குச் செல்லக்கூட அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. தமக்குப் பதிலாக இன்னொருவரைத்தான் அனுப்பி வைக்கிறார்”, என்று அவர் சொன்னதை மற்ற உறுப்பினர்கள் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவரது சகா மஹ்மூட் ஜக்கரியா (பிஎன் -சுங்கை ஆச்சே) லிம்முக்கும் ஆட்சிக்குழுவினருக்கும் 15 விழுக்காடு சம்பள உயர்வுகூட வழங்கலாம் என்றார்.
“எங்கள் தரப்புக்கு (எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிடுக்கு) சம்பள உயர்வு (100 விழுக்காடு) வழங்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் (பக்காத்தான் ரக்யாட்) கொடுப்பதுதான் சரியாகும்”, என்றவர் சொன்னார்.
எங்களுக்கும் மாத வரவு அதிகரிக்கும் என்றால் நாங்கள் எங்கள் எதிரி கட்சிக்கும் எங்களது வற்றாத ஆதரவைத் தெரிவிக்க சிறிதும் தயங்கோம். பணம் என்றால் எங்களுக்கு எதுவும்…., ஆமாம்2.. எதுவும், சந்தேகம் சிறிதும் வேண்டாம், சம்மதமே. நாங்கள் ஊர் சிரிக்கும் கொள்கைவாதிகள்….!
பணம் என்றால் பிணமும் ஆனந்தக் கூத்தாடும்! அம்னோக்காரன் மட்டும் கண்ணீரா வடிக்கப் போகிறான்?
மா இ கா என்று ஒரு மானஸ்த்தன் இருந்தானே.. எங்கே காணோம்?