பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஷியாக்களுடன் தொடர்புண்டு என்று கூறி அது உண்மை என்பதற்கு 10 சான்றாதாரங்களையும் உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது. அது உண்மையல்ல என்றால் மாட் சாபுதான் அதை நிரூபிக்க வேண்டும் என அமைச்சின் சமய விவகார அதிகாரி உஸ்டாஸ் ஸ்மிஹான் மாட் ஸைன் அல் காரி(இடம்) கூறினார்.
“ஆதாரங்கள் வலுவற்றவை என்றால் அதை அவர்தான் சொல்ல வேண்டும். அமைச்சுக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம். யு-டியுப்பில் அல்லது செய்திதாள்களிலும் அதைச் சொல்லலாம்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இது என்ன நம்ப நாட்டிலே புது மாதிரியான சட்ட விதிமுறையாக இருக்கு…!!! பொதுவா ஒருவர் சட்டத்திற்கெதிராக குற்றம் புரிந்துள்ளார் என போதிய ஆதாரம் இருப்பின் அரசாங்கம்தான் சட்ட நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் அவர் செய்துள்ளதாகக் கருதப்படும் குற்றத்தை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து அவருக்குத் தண்டனை வழங்க வகை செய்யும். அதை விட்டுவிட்டு, சும்மா mass media வாயிலாக, பலவீனமான, நகைப்பூட்டும் ஆதாரங்களைக் கூறி, வெறுமனே குற்றம் சாட்டப்டுபவர், தான் நிரபராதி அல்ல என U TUBE மூலம் நிரூபிக்க வேண்டுமாம்….!! உண்மையிலேயே இது ஒரு புது legal precedentதான். ஆக, இனிமேல் குற்றம் சாட்டப்படுபவேகள் எல்லாம் U TUBE மூலம் தாங்கள் நிரபராதிகள் அல்ல என நிரூபித்துக்கொண்டால் போதும் ….!! Courts தேவை இல்லை. எப்படி இவர்களின் மடத்தனத்திற்கு ஒரு வரம்பே இல்லாமல் இருக்கு…!! இவங்கல்லாம் நாட்டின் தலைமை நிர்வாகிகள்….!!! எங்கேய் போய் முட்டிக்கொள்வது…!! வெட்கம் அறியா வெள்ளையாட்டுக் கூட்டம்.
என்னே அடாவடித்தனம்? குற்றவாளி என்பதை நிருபிக்கவே தியானி இல்லாத அரசாங்கத்துக்கு ஏன் மாட் சாபு பதில் அளிக்கவேண்டும். ஓஹோ, இதுதான் நம் அரசாங்கத்தின் நீதி நிலை நாட்டும் லட்சணமோ? ‘Batu Putih’ தீவு நம் கையை விட்டு போன ஊழலுக்கே பதில் தெரிவிக்காமல் அரசாங்கமும் நீதியை நிலை நாட்ட வேண்டிய தலைமை அதிகாரியும் இன்னும் மௌனசாமியாக இருக்கின்றனர். இந்நேரம் இக்குற்றச்சாட்டை வேறொருவர் சுமத்தியிருந்தால், உள்நாட்டு அமைச்சரும் போலிஸ் தலைமை அதிகாரியும் மண்ணுக்கும் விண்ணுக்கும் எகிறி குதித்திருப்பார்களே? இந்நாட்டு மலாய்க்காரர்கள் எப்படித்தான் இவ்வளவையும் கண்டு பேசாமல் மௌனமாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. சிவ சிவ.
கமாபொ நீங்கள் சொல்வது மிகச் சரி….ஒருவரைக் குற்றவாளி என்று தக்க ஆதாரப்பூர்வமாக நிரூபித்து பின் அவர் அதை மறுக்கின்றாரா என்று கேட்பது வழக்கம். இதுதான் போலே லேன் ஆச்சே. எல்லாம் நடக்கும். நீங்கள் முட்டிக்கொள்ளும் இடத்தை சொல்லுங்கள், நானும் வந்து முட்டிக்கொள்கிறேன்.