ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம், மேலும் உடைபடாமல் இருக்கவும் கோலாலும்பூர் மத்தியில் இந்துக்களின் வழிபாட்டு மையமாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவும் புதிய திட்டங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
ஆலய நிர்வாகம் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரைச் சந்தித்துப் பேசியது என அதன் ஆலோசகர் எம்.மனோகரன் கூறினார். “குறுகிய நேரம் அமைதியாக நடந்த அச்சந்திப்பில்” தெங்கு அட்னான் ஆலயத்தாரின் பரிந்துரைகளைப் பரிசீலிக்க ஒப்புக்கொண்டார்.
ஆலயம் அமைந்துள்ள நிலத்தை ஆலயத்துக்கே சொந்தமாக்கி அரசிதழில் அறிவிப்பது அதற்குக் கைம்மாறாக ஆலயம் அதன் நிலத்தின் ஊடே மினாரா ஹப் செங்-க்குக்கு நடைபாதை அமைப்பதற்குத் தெரிவித்துவரும் எதிர்ப்பைக் கைவிடுவது முதலிய பரிந்துரைகள் அத்திட்டத்தில் உள்ளிட்டிருக்கின்றன.
ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என வீறாப்பு பேசியவர்கள் இப்போது துங்கு அட்னானிடம் மண்டியிடுவது ஏன்? ஏற்னவே இதே திட்டத்தைதானே இந்து சங்கம், கோகிலன் பிள்ளை, லோக பாலா போன்றவர்கள் முன்வைத்தார்கள். ரெஸ்டோரன் + குடும்பக் கோயில் உரிமையாளர்களும் மஇகா -பக்கத்தான் வெட்டித் தலைவர்களும் செய்த அரசியல் நாடகங்களால் அந்த ஆலயம் உடைபட்டு இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம்.
என்ன பரிந்துரைகள் என்பதை பக்தர்கள் தெரிய ஆசைப்படுகின்றனர் ?
“பரிசீலிக்க ஒத்துகொண்டார் என்றால்” ஓகே என்றுதான் ஆர்த்தம்.நாடாளுமன்ற பதவியில் இருக்கும் சுரேன்றனும் சிவராசாவும் செய்ய முடியாதை எக்ஸ் மனோகரன் செய்கிறார்.
நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில், மலேசிய பங்கு பரிவர்த்தனை சந்தையில் இடம்பெற்றுள்ள, hap seng consolidated berhad ஒன்றாகும். நியாயம் நம் பக்கம் (?!) இருக்கோ இல்லையோ,,,,, , பணம் பத்தும் செய்யும்; அது மலேசியாவில் 11ம் செய்யும். சும்மா கத்தி2 ஒன்றும் செய்ய முடியாது. சமயங்களில் இது போன்ற “மென்மையான” அணுகுமுறைகள் அதிக பலன் தரும். பொருத்தமான இடங்களில் பட்டா இல்லாமல் உள்ள பழமையான கோவில்களுக்கு பட்டா பெறுவதில் கோவில் நிர்வாகத்தினர் அறிவுபூர்வமான, காரியசித்தி கொண்ட தீவிரம் கொள்ளவேண்டும். இவர்களின் முயற்சிக்கு நமது நன்றி.
ஒரு நல்ல இடத்தை
பெற்று இன்னும் ஒரு
சரா சரி பெரிய கோவில் கட்டலாமே. சிறிய இடத்தில் ஏன் நமக்கு தேவை.