கோலாலும்பூர் மாநராட்சி மன்றம்(டிபிகேஎல்) வரிகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதை விடுத்து பணித்திறனை உயர்த்த வழிவகை கண்டறிய வேண்டும் என்கிறார் கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் தலைவர் கைரில் நிஜாம் கைருடின்.
டிபிகேஎல், சிலாங்கூர் ஆகியவற்றின் வருமானம் ஏறத்தாழ சமம்தான் (முறையே ரிம1.69 பில்லியன், ரிம1.63 பில்லியன்). கோலாலும்பூரைக் காட்டிலும் 3.2 மடங்கு அதிக மக்கள்தொகையையும் 33 மடங்கு அதிக பரப்பளவையும் கொண்டுள்ள சிலாங்கூரால் சமச்சீரான பட்ஜெட்டைத் தயாரிக்க முடிகிறது.
ஆனால், டிபிகேஎல், சிலாங்கூரைவிட 34 விழுக்காடு அதிகமாக, ரிம2.19 பில்லியன் செலவிட விரும்புகிறது.
“இந்தப் புள்ளிவிவரங்கள் டிபிகேஎல் சிலாங்கூரைப் போல் திறமையாக செயல்படவில்லை என்பதைக் காண்பிக்கின்றன. டிபிகேஎல் கூடுதல் பணம் தேவை என்று கேட்டுக்கொண்டிருக்காமல் செலவினத்தையும் விரயத்தையும் குறைத்து பணித்திறனை உயர்த்தும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்”, என கைரில் ஓர் அறிக்கையில் கூறினார்.
இவனுங்க செய்யும் தெண்ட செலவுக்கு மக்கள் பழி கடவா ?
போடுங்கடா! போடுங்க! இன்னும் நல்லா வளைச்சி வளைச்சி போடுங்க ஓட்ட! நம்பிக்கை நம்பிக்கைன்னு சொல்லிச் சொல்லியே வெக்கிறான் பின்னாலே ஆப்பு! 50 வருஷமா இப்படித்தானே பன்னிக்கிட்டு இருக்கானுங்க. ஒரு தடவை பட்டா புரியாது? திருந்தவே மாட்டானுங்க!
பணித்திறனை உயர்த்துவது என்பது மிக மிக சிரமமான ஒரு காரியம். இன்று அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் எப்படி பணித்திறனை உயர்த்தாமல் பணி புரிவது என்று கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்! அதனைத் தான் அவர்கள் செய்கிறார்கள். இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சொத்து வரியைத்தான் உயர்த்த வேண்டும்!