பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சிலாங்கூர் மாநில டிஎபியின் புதிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் தெரசா கோவின் இடத்தை நிரப்புகிறார்.
“பொறுப்பு மிக்க இப்பதவியை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிஎபி வெற்றி பெற்றுள்ள இக்கட்டத்தில் நான் இப்பதவிக்கு வருகிறேன். இதை மிஞ்சுவது கடினம்”, என்று புவா கூறினார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இத்தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற சிலாங்கூர் சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.
உங்களை நம்பி வந்த இந்தியர்களை காலை வாரி விட்டுடாதீர்கள். அப்புறம் நேரம் வரும்பொழுது நாங்களும் காலை வாரி விட வேண்டி வரும்!
ம இ காவை நம்புவதைவிட டி ஏ பி யை தாராளமாக நம்பலாம்….
மக்கள் உரிமைக்கு தைரியமாக குரல் கொடுப்பர் …..
சரியான தேர்வு தோணி புவாவை கண்டால் அம்னோகாரன் ஆடுகிறான் ! புள்ளி விவராமாக பேசும் தோணி பூவா எனக்கும் பிடிக்கும் !
வாழ்துக்கள் டோனி ….மென் மேலும் உயர என் வாழ்துக்கள்…..வாழ்க டி எ பி…..
வாழ்த்துகள்! அதே சமயத்தில் தமிழனையும் தமிழையும் ஒதுக்கி விடாதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போம் என்று நம்பி விடாதீர்கள்!