–மு. குலசேகரன், டிசம்பர் 16, 2013.
தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெரிய பாதிப்பு இருக்கின்றது என்பதனை ம.இ.கா தலைவர்களும் அதன் கீழ்மட்ட தொண்டர்களும் எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றார்கள்?
தமிழ்ப்பள்ளிகளின் காவலன், தமிழுக்கு குரல் கொடுப்போர் என்றெல்லாம் பறைசாற்றும் ம.இ.கா தலைவர்கள் இந்த புதிய கல்வித் திட்டத்தின் வழி தமிழ்க் கல்வியின் பயன்பாடு இந்த நாட்டில் சிறுகச் சிறுக குறைப்படுவதற்கான ஏற்பாடு இதில் புகுத்தப்பட்டுள்ளது என்கின்ற உண்மையை உணர்ந்திருக்கின்றார்களா ?
தமிழும் சீனமும் விருப்பப் பாடங்கள்தான்
இப்பொழுது ம.இ.கா உட்கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. எவ்வளவோ பணமும் நேரமும் பிரச்சாரங்களும் பிரயோகிக்கப்பட்டு, ஒருவழியாக தங்களுக்கு வேண்டிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் ம.இ.கா உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டனர். இந்த முடிவுகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. இந்திய சமுதாயத்தை இப்பொழுது எதிர்நோக்கி உள்ள தலையாயப் பிரச்சனை இந்தக் கல்விப் பிரச்சனைதான்.
தமிழும் சீனமும் இன்னும் 12 ஆண்டுகளில் இடைநிலைப் பள்ளிகளில் அரபு மொழியுடன் இணந்து விருப்பப் பாடங்களாக அமையவுள்ளன என்று கல்விப் பெருந்திட்டத்தில் மிகவும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பள்ளிகள் இருப்பதன் அவசியம் குறைந்துவிடும். மேலும் தேசியப் பள்ளிகளிலும் தாய் மொழி பாடங்கள் போதிக்கப்படுவதால் தமிழ்ப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
மாலாயும் ஆங்கிலமும்தான்
இப்பொழுது தமிழ் சீனப்பள்ளிகளில் மலாய் மொழி போதனை மலாய் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்படவிருக்கிறது. இதனால் தமிழ் மொழி பயன்பாடு தமிழ்ப்பள்ளிகளில் குறையும் என்பது தின்ணம். வருங்காலங்களில் தமிழ் விருப்பப் பாடம் என்ற நிலை ஏற்படும் பொழுது தமிழ் படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கின்றது.
ரசாக் திட்டம் 1956
தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், கட்டமைப்பு செயல்பாடுகள் இன்று போல் இருக்க வேண்டும் என்பதில் சமுதாயம் உறுதியாக இருக்க வேண்டும்.
மேலும், அவை வலுவடைய நம்மாலனவற்றையும் நாம் செய்தே ஆகவேண்டும். ஆனால் இந்த புதிய கல்விப் பெருந்திட்டத்தில் அது போன்று தாய்மொழிப் பள்ளிகளின் வளர்ச்சி பற்றி எதுவுமே கூறப்படவில்லை. அத்திட்டம் முழுக்க முழுக்க மலாய் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் மட்டுமே முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. ஏறக்குறைய 95 விழுக்காடு சீன மாணவர்களும் 55 விழுக்காடு இந்திய மாணவர்களும் அவர்தம் தாய் மொழிக் கல்வியில் தங்கள் ஆரம்பக் கல்வியைப் பயிலும் போது, அம்மொழிகளின் வளர்சிக்கும் அவை போதிக்கப்படும் பள்ளிகளுக்கும் எந்த ஒரு சிறப்புத் திட்டமும் இல்லாத போது இந்த புதியத் திட்டத்தை எப்படி ஒரு தேசியக் கல்வித் திட்டமாக ஏற்றுக் கொள்ள முடியும்?
டோங் சோங் மற்றும் தமிழ் அறவாரியம் போன்ற அரசு சாரா அமைப்புகள் இத்திட்டம் தாய் மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி அமைச்சர் முகைதின் யாசின், இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கின்றார்.
மேலும், அவர் தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளவரை தாய் மொழிப் பள்ளிகள் காக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அரசியலையும் கல்விக் கொள்கையையும் அவர் போட்டுக் குழப்புகிறார் என்பதை அவர் பேச்சு தெளிவாக்குகிறது. எந்த ஆட்சி இருந்தாலும் தாய் மொழிப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்பதே நமது கடப்பாடு.
கல்வி அமைச்சரின் இறுதி இலட்சியம் எல்லாப் பள்ளிகளும் ஒரே மொழியை, அதாவது மலாய் மொழியை, போதனா மொழியாக கொண்ட பள்ளிகளாக மாற்றம் காணப்பட வேண்டும் என்பதே!
இதே முயற்சியை 1956 ல் ராசாக் கல்வித்திட்டத்தின் வழி கொண்டு வர அரசு முயற்சித்தது. அப்பொழுது சீனர்களும் தமிழர்களும் அந்தக் கொள்கையை கடுமையாக எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் தேசியக் கல்விப் பெருந்திட்டம் என்றப் போர்வையில் இந்த திட்டம் மறுவடிவம் கண்டுள்ளது.
இதனைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. சாதரண மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் வாதிகள்களின் அறிக்கைகளை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றார்கள். பலருக்கு தேசிய கல்வித்திட்டம் என்றாலே என்ன வென்று தெரியாது. புரிந்து விளங்கி போராடுபவர்கள் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சில அரசு சாரா அமைப்புகள் மட்டுமே.
இத்திட்டத்தில் இருக்கும் குறைகளை அரசாங்கத்துக் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டவர்கள், ஆட்சியில் பங்கு வகிக்கும் ம.இ.காவினரே, இல்லையா?
மொழிக்காக ஒன்றிணைவோம்!
இந்தத் திட்டம் வழி ஏற்பட்டுள்ள அதிருப்தியை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லுமுன், இந்தக் கல்வித் திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களை ம.இ.கா உயர் மட்டம் முழுமையாக தெரிந்து வைத்துள்ளதா என்பது மிக முக்கியம்.
அப்படியே அதனை முழுமையாக தெரிந்து கொண்டிருந்தாலும் கூட அதனை ம.இ.கா ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டுள்ளதா என்பது அடுத்த கேள்வி!
இந்த இரண்டு கட்டங்களையும் தாண்டி அரசாங்கத்திற்கு இதனைக் கொண்டு செல்ல ம.இ.கா முற்படுமா என்பது தொடரும் கேள்வி.
ம.இ.கா இப்பொழுது மௌனமாக இருந்து இந்தக் கல்விக் கொள்கை முழுமையாக அமுலுக்கு வந்துவிட்டால், இது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையாக கருதப்படும். இனிவரும் சந்ததியினர் இப்பொழுது உள்ள நமது சம கால சந்ததியினரை மன்னிக்கமாட்டார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த தமிழ் மொழியினை ஒழித்துக் கட்டியவர்கள் என்ற “பெருமையை” நாம் பெற்றவர்களாகிவிடுவோம்!!
ம.இ.காவும், பாரிசானுக்கு ஆதராவாக செயல் படும் கட்சிளான ஐ பி எப், மக்கள் கட்சி, பிபிபி, கெரக்கான் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து கருத்தரங்கு ஒன்று நடத்தி அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்
இக்கருத்தரங்கிற்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படல் வேண்டும். இது மொழி, இனம் சார்ந்த முக்கியப் பிரச்சனையாதலால், டி ஏ பி கட்சியும் இக்கலந்துரையாடலில் நிச்சயம் பங்கு கொள்ளும்.
இக்கூட்டத்தில், இந்த தேசியக் கல்வித் திட்டத்தினால் தாய்மொழிப் பள்ளிகள் என்ன என்ன பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றன என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பின்னர், அதன் அடிப்படையில் பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு அதனை உடனடியாக கல்வி அமைச்சிடம் கொடுக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் சீனப்பள்ளிகளை பிரதிநிதித்து மசீச அல்லது மற்ற சீன அமைப்புக்கள் இணந்து கொண்டால் அது மேலும் வலு சேர்க்கும்.
இவ்வேற்பாட்டை ம.இ.கா செய்யத் தயங்கினால், நான் முன்நின்று இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள ம.இ.காவும் மற்ற பாரிசன் ஆதரவு கட்சிகளும் இக் கூட்டத்திற்கு கட்டாயம் வரவேண்டும்.
ம.இ.காதான் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை ம.இ.கா செய்யத் தவறினால் அது தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகமாகக் கருதப்படும் என்பதனை அதன் தலைவர்கள் உணரவேண்டும்,
தாய் மொழிப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலையாக இருக்க துணை செய்பவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 152 மற்றும் 12 ஆகியவை. மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் கருதுக்களைக் கேட்டு தாய்மொழிப் பள்ளிகளை மாற்ற முயற்சிப்பது இச்சட்டத்திற்கு புறம்பானது என்பது தெரிந்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
இந்நாட்டில் தமிழ் இனி வாழ்வதும் சாவதும் இப்போதைய தலைமுறையினரின் கையில்தான் உள்ளது என்பதனை அனைவரும் உணரவேண்டும்.
என்னய்யா கேள்வி இது. ம.இ.க. செயல்படாமல் “இளம் பிள்ளை வாதம் பிடித்த” கட்சியாக மாறி தேக்கி தேக்கி நொண்டி நடக்கும் நிலையில் உள்ளது. அந்த கட்சியினரிடம் போய் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வார்கள். அவர்களை விட்டுத் தள்ளுங்கள். நீங்களே (ஜ.செ.க.) தமிழர்களை நாடி தத்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக் கூடங்களில் படிக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒட்டு கேட்டு கூட்டம் கூட்ட முடியும் போது இதைச் செய்ய முடியாதா என்ன? ஏழைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை உங்கள் கட்சித் தொண்டர்கள் வழி செய்து காட்டுங்கள். உங்கள் ஈப்போ பாராட் பார்லிமென்ட் உறுப்பினர் ஊதியத்திலிருந்தும் மற்றும் புந்தோங் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊதியத்திலிருந்தும் 50% ஒதுக்கி அவ்வட்டாரத்தில் இருக்கும் தமிழ் பள்ளி மாணவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். வெட்டிப் பேச்சை விட்டு விட்டு காரியத்தில் இறங்குங்கள். யாரோ எழுதிக் கொடுத்து வெற்று அறிக்கை விடும் மன்னனாக இருக்காதீர்கள். மேற்கூறிய 2 தொகுதி தலைவர்களுமே ஒற்றுமையின்றி ஒருவரை ஒருவர் வேரருக்கின்ரீர். அப்புறம் நீங்கள் எல்லாம் எப்படி தமிழர்களையும், தெலுங்கர்களையும் தூக்கி நிறுத்துவது. அவனவன் அரசியலில் ஏறி வந்ததும் தான் வந்த வழியை மறந்து விடுவார்கள் என்பதற்கு நீங்கள் இருவருமே சிறந்த உதாரணம்! முதலில், நீங்கள் இருவரும் உரு மாறுங்கள்!. இல்லையேல் அடுத்த தேர்தலில் மாற்றப் படுவீர்கள் என்பது திண்ணம்.
ஆளும் கட்சியின் பங்காளியான ம இ காவும் ம சீ சவும் இந்த முயற்சியில் முன் நின்று மற்ற பாரிசான் ஆதரவு கட்சிகளுடன் இணைந்து, அரசு சாரா இயக்கங்களுடன் ஒரு சேர்ந்து ஆலோசித்து அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மக்கள் முடிவே மகேசன் முடிவாக உருவெடுக்க வேண்டும். அனைத்து இந்தியர்களும் சீனர்களும் இந்தப் போராட்டத்தில் சற்றும் பின்வாங்கக்கூடாது…!!!!! இந்த போராட்டத்தை எதிர்ப்போரை கலை பிடுங்க வேண்டும்… !!!!
MIC க்கு நக்கவே நேரம் இருக்கு மற்றதுக்கு அவனுங்கள poruttta வரைக்கும் ஒன்றும் செய்ய முடியாத சோணகிரி பசங்க!!! சோம்பேறி சுருட்டல் தலைவன் தமிழனை எப்படியாவது அழிக்கனும் என்ற திட்டம் தீட்டி எந்த தமிழனுக்கும் இது வரை ஒரு நல்லதையும் செய்யாத சுயநலவாதி – இவனுங்கலஎல்லாம் இன்னுமா நம்பி நாசமா போறதுக்கு தயராக இருக்கீங்களா ? ராமசாமி மாண்டோர் நீர் சொன்ன கலை பிடுங்க வேண்டும் என்பது அந்த MIC உங்களை ஆள் வைத்து அல்லது நம்ம சஹிட் கொமிடியனிடம் சொல்லி உங்களை shoot பண்ணிடுவணுங்க கவனம் ஒரே வழி UMNO MIC MCA இவனுங்களை இல்லாமல் செய்ய வேண்டும்!!!
ம.இ.கா என்ன செய்ய வேண்டும்? மா இ கா அம்னோவின் இத ஒன்னு ஒண்ணா புடுங்க வேண்டும் ,இத தவிர ம இ க வுக்கு என்ன தெரியும் ? ICE CREME மணிய புடிச்சி ஆட்ட தான் தெரியும்
MIC க்கும் தமிழ் பள்ளிகளுக்கும் தூரம்– அன்றிலிருந்து இன்றுவரை நம் பள்ளிகளை அடமானம் வைத்து அவன்களின் பதவியை காப்பாற்றிகொண்டான்கள். இதை விட வேறு என்ன சொல்ல-இந்த துரோகிகளைப்பற்றி?
தமிழ் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேலை நம் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் மிக முக்கியமாகும்.
கல்வி பெரும் திட்டத்தில் தான் மஇகா இணைந்து குளிர் காயுதே..? அது எப்படி வாய் திறக்கும்..? கொட்டாவிதான் விடும்..!
தமிழ் மொழிக்கும் மலேசியா இந்தியா கங்கெரசுகும் MIC என்ன சம்பந்தம் அவர்கலேலம் பதவிக்கு வந்து விட்டார்கள் பளிகுடம் என்றால் என்ன ?????? பகவன் தன் கபத்த வேண்டும்!!!
MIC kkU தமிழ் தலைமை பெண் ஆசிரியர்களோடு இந்தியா சென்று கூத்தடிக்க தெரியும் ஆனால் மற்றது தெரியாது