நாளை குடிநீர் விநியோகம் தடைப்படும்போது ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முடியாத இடங்களில் ஊராட்சி மன்றங்கள் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துதவும்.
முன்பு பல வேளைகளில் நீர் விநியோகம் தடைப்பட்டபோது ஸ்பாஷால் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்றங்கள் உதவி செய்வதெனத் தீர்மானித்திருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் கூறினார்.
“ஊராட்சி மன்றங்கள் உதவ முன்வந்துள்ளன. ஆனால், இது அவற்றின் வேலை அல்ல என்பதை மறந்து விடக்கூடாது”, என்று கூறிய அவர், நீர் விநியோகம் தடைப்படும் இடங்களுக்கு தண்ணீரைக் கொண்டு சென்று கொடுப்பது ஸபாஷின் பொறுப்பு என்பதையும் நினைவுறுத்தினார்
மக்கள் நீர் தொட்டிகளை கொண்டு வந்து சாலை மறியல் செய்யலாமா.?
இந்த சீரமைப்பு வேலையை ஏன் கிறிஸ்மஸ் பெருநாள் காலங்களில் செய்யவேண்டும் ?? கிருஸ்துவர்களை பழிவாங்கும் உல் நோக்கம் இருப்பது போன்று உள்ளது . ஷபாஸ் பற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் எப்பொழுதும் ஒரு பகைமை இருந்துவருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் , ஆகா, இதை காரணமாக வைத்துக்கொண்டு , மக்களை பெருநாள் காலங்களில் சிரமத்திற்கு ஆளாக்குவதாகவே எண்ணத்தோன்றுகிறது. ஏன் கிறிஸ்மஸ் முடிந்து சேவையை தொடங்கலாமே ?? யோசிப்போம் !!