டிசம்பர் 31-இல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி

turunமாணவ ஆர்வலர்களும் இளைஞர் அமைப்புக்களும் சேர்ந்து இன்றியமையாப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிராக புத்தாண்டுக்கு முதல் நாள் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

‘துருன்’ என்ற இயக்கத்தின்கீழ் டாட்டாரான் மெர்டேகாவில் அப்பேரணி நடைபெறும். பேரணி நடத்த சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்), சொலிடேரிடி மஹாசிஸ்வா மலேசியா (எஸ்எம்எம்) உள்பட பல என்ஜிஓ-கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளன. 

மக்கள் மின்சாரம், பெட்ரோல் முதலிய அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை ஏற்கவில்லை என்பதை அரசாங்கத்துக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்திட வேண்டும். அதன் பொருட்டு திரண்டு வருவீர்  என்று துருன் தலைவர் அஸான் சபார் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

“எங்களின் நோக்கம். விலை உயர்வுக்கு எதிர்ப்புக்குத் தெரிவிப்பதுதான், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதல்ல”, என்றாரவர்.

இரவு 8 மணிக்குத் தொடங்கும் அப்பேரணியில் 10,000 பேர் திரள்வர் என துருன் எதிர்பார்க்கிறது.