பூஜாங் பள்ளத்தாக்கை அடுத்து அபாயத்தில் உள்ள இடம் மலாக்கா கம்போங் செட்டி

vethaபூஜாங் பள்ளத்தாக்கில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சண்டி ஒன்று உடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இப்போது இன்னொரு பாரம்பரிய இடமும் உடைபடும் அபாயத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறுகிறார் மலேசிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. மலாக்காவில் உள்ள கம்போங் செட்டிதான் அது.

கம்போங் செட்டியும் அதன் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயிலும் 1827-இல் உருவானவை. இரண்டுமே 2002-இல் பாரம்பரிய தலங்களாக அறிவிக்கப்பட்டவை.

இப்போது அவற்றுக்கிடையில் 22-மாடி தங்குவிடுதியும் கார் நிறுத்துமிடமும் கட்டப்படும் என்பதை அறிந்து இண்ட்ராப்  “திடுக்கிட்டுப் போனதாக” வேதமூர்த்தி ஓர் அறிக்கையில் கூறினார்.

புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது கோயிலின் கட்டமைப்பைச் சேதப்படுத்தும் என்பதுடன் கம்போங் செட்டியின் பாரம்பரியத் தன்மையும் பாதிப்புறும் என்றாரவர்