விலை உயர்வின் விளைவு,பிரதமரின் மதிப்பு 10 புள்ளிகள் குறைந்தது

najibஉதவித் தொகை குறைக்கப்பட்டதால் வாழ்க்கைச் செலவு உயர்ந்ததை அடுத்து பிரதமர் நஜிப்பின் அங்கீகார மதிப்பீட்டளவு 52 விழுக்காடாக வீழ்ச்சி கண்டது.

மெர்டேகா மையத்தின் கருத்துக்கணிப்பின்படி, நஜிப்பின் மதிப்பு 2009 செப்டம்பருக்கு(59 விழுக்காடு) பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வு, சீனிக்கான உதவித்தொகை இரத்து ஆகியவை அறிவிக்கப்பட்டு பொருள், சேவை வரிகள் பற்றி விளக்கப்பட்டு வந்த வேளையில் இக்கருத்துக்கணிப்பு செய்யப்பட்டது.

எல்லா இனங்களிடையேயும் அவருக்கிருந்த மதிப்பு குறைந்துள்ளது. இந்திய வாக்காளர்களிடம்தான் அது மிகவும் குறைந்து போயிருந்தது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 67 விழுக்காட்டினர் பொருளாதாரம் குறித்துதான் மிகவும் கலவை கொண்டிருப்பதாக மெர்டேகா மையம் குறிப்பிட்டது.