அரசாங்க ஆதரவு எம்பிகளே சாலைக்கட்டணத்துக்கு எதிர்ப்பு

1-sharirஅடுத்த ஆண்டு டோல் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவைக் குறைகூறுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் பிஎன் ஆதரவு எம்பிகள் (பிஎன்பிபிசி) மன்றமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

அது அரசாங்கம் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியது.

“நம் தேர்தல் அறிக்கை டோல் கட்டணம் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. அதனால், கட்டண உயர்வு கூடாது என்றே பிஎன்பிபிசி விரும்புகிறது”, என அதன் தலைவர் ஷாரிர் சமட் (இடம்) கூறியதாக த ஸ்டார் ஆன் லைன் கூறியது.

ஆனால்,  பிஎன்பிபிசி முறைப்படியான எதிர்ப்பை அரசாங்கத்துக்குத் தெரிவிக்காது. ஏனென்றால், கட்டண உயர்வு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை ஷாரிர் சுட்டிக்காட்டினார்.