உள்துறை அமைச்சு த ஹீட் என்ற வார செய்தி இதழ் வெளியிடப்படுவதிலிருந்து காலவரையின்றி தள்ளி வைத்துள்ளது. பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகியோர் குறித்து அது கடந்த நவம்பரில் வெளியிட்டிருந்த கட்டுரை அதற்கான காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து வந்திருப்பதை சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்திய போதிலும், அந்த உத்தரவில் காணப்படும் சொற்கள் என்ன என்பது சரியாகத் தெரியவில்லை.
அமைச்சிடமிருந்து த ஹீட் பெற்றுக் கொண்ட காரணம் கோரும் கடிதத்தில் எந்தக் கட்டுரை அதிருப்தியை உண்டாக்கியது என்று கூறப்படவில்லை.
இருப்பினும், பிரதமரும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் அளவுக்கு மீறி செய்யும் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பி அந்த இதழின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த “All eyes on big spending PM Najib” என்ற கட்டுரைதான் இந்நடவடிக்கைக்கான காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
“அக்காரணம் கோரும் கடிதத்திற்கு பதில் அளிக்க டிசம்பர் 24 வரையில் அவகாசம் இருக்கிறது”, என்று த ஹீட் வட்டாரத் தகவல் கூறுகிறது.
வெட்கமில்லாத நஜிப் ரோச்மாஹ் மக்கள் பணத்தை வாரி அழித்து என்னமோ அவன் அப்பன் வீட்டு பணம் மாதிரி ஊதாரி தனமாக செலவழிக்கிறான் அதை கேட்க நாம் அனைவரும் பேரணியில் கலந்து BN பன்னாட போர்க்கி னைகளை உதைபதுதான் நல்லது