விலை உயர்வு-எதிர்ப்பியக்கத் தலைவர் முகம்மட் அஸான் கைது

1 azanபல்கலைக்கழக மாணவரும், பொருள் விலைகள், சேவைக்கட்டணங்கள் ஆகியவற்றைக் குறைக்கப் போராடும் காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (காமிஸ்), ஒரு என்ஜிஓ-வான துருன்(Turun) ஆகியவற்றின் தலைவருமான முகம்மட் அஸான் சபார்(இடம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

நேற்று  நள்ளிரவுக்குமுன், கோலாலும்பூர் கம்போங் பாருவில் உணவருந்திக் கொண்டிருந்த அஸான் அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் புத்தாண்டுக்கு முன்தினம் விலை உயர்வுகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருக்கும் மாபெரும் கண்டனக் கூட்டம் பற்றி விசாரணை செய்ய போலீஸ் விரும்புவதாக தெரிகிறது.

அஸாம் கைது செய்யப்பட்டதை இன்னொரு என்ஜிஓ-வான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (SAMM) கண்டித்தது.

“தகவல் பெற நினைத்தால் அவரைப் போலீஸ் நிலையத்துக்கு வரச் சொல்லி இருக்கலாமே?”, என அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷேக் யாசிர் வினவினார்.

அஸான் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.