பிஎன் அரசாங்கம், மலாய் மேலாதிக்கத்துக்குப் போராடி வரும் அமைப்பான பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பதன்வழி தனக்குத் தானே குழிபறித்துக்கொள்கிறது என கெராக்கான் கூறியது. அது வாக்காளர்களால், நகர்ப்புறங்களில் மலாய் வாக்காளர்களால்கூட புறக்கணிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்றது வருணித்தது.
பிஎன் நோக்கங்களுக்கு எதிரான ஓர் அமைப்புப்போல் பெர்காசா செயல்பட்டு வந்துள்ளது எனக் குறிப்பிட்ட கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், முக்கிய அரசாங்க அமைப்புகள் பெர்காசா நிகழ்வுகளில் பங்கேற்பது ஏன் என அரசாங்கம் விளக்க வேண்டும் என்றார்.
“பிஎன் அதற்கு உதவுவது தற்கொலை செய்துகொள்வது போன்றதாகும். அது தவறான தோற்றத்தைத் தருகிறது”,என டான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அம்னோவின் முகத்திரை கிழிக்கப் பட்டு விட்டது.
கெரக்கான்,தோழமைக்கு கைகொடுப்போம்,உரிமைக்கு குரல் கொடுப்போம்!ம இ க அங்கே யாரப்பா இளைய தல!