அது மக்கள் நடத்தும் பேரணி, அதனால் அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை

1 azanபல்வேறு பொருள்களின் விலை உயர்வுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும்  டிசம்பர் 31 பேரணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாதிருக்கலாம்,  ஆனால் அதற்காக பேரணி நடத்த முன்மொழிந்த என்ஜிஓ-வான துருன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை.

“எங்களைப் பொறுத்தவரை,  பேரணி மக்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.  நாங்கள் அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்.  நாங்கள் அதன் ஏற்பாட்டாளர்கள் அல்லர். பேரணி ஏற்பாட்டாளர் என்று எவரும் உரிமை கொண்டாட முடியாது”, என து ருன் தலைவர் முகம்மட் அஸான் சபார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆனாலும், இதன் தொடர்பில் போலீசுடன் பேச்சு நடத்தப்போவதாக அஸான் கூறினார்.

மக்களுக்குப் புத்தாண்டுக்கு முதல்நாள் ஒன்றுகூடும் உரிமை உண்டு. அரசமைப்பின் பகுதி 10 அந்த உரிமையை வழங்குகிறது.

“நாங்கள் கொண்டாட்டத்துக்காக அங்கே செல்கிறோம். தொல்லை கொடுப்பதற்கு அல்ல”, என்றார்.