சினம் கொண்ட ஊடக இயக்கம் (கெராம்), வாராந்திர செய்தி இதழான த ஹீட் மீதான தடைவிதிப்புக்கு எதிர்ப்பது உள்பட, பத்திரிகைச் சுதந்திரம் கோரி அடுத்த சனிக்கிழமை கண்டனக் கூட்டமொன்றை நடத்தும்.
‘சிகப்பு பென்சில்’ என்ற தலைப்பில் அக்கண்டனக் கூட்டம் கோலாலும்பூரில் நடைபெறும் என நேற்றிரவு நடைபெற்ற ‘ஊடகத்துக்குச் சுதந்திரம் தருவீர்’என்ற கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.
“ஜனவரி 4-க்குள் த ஹீட் விற்பனைக்கு வர வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம்தான்”, எனக் கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மலேசியாகினி தலைமை செய்தி ஆசிரியர் பாத்தி அரிஸ் ஒமார் கூறினார்.
“த ஹீட் கடைகளில் விற்பனைக்கு வந்தாலும்கூட ஆர்ப்பாட்டம் நடக்கும்”, என்று கூறிய அவர் அந்த ஆர்ப்பாட்டம் த ஹீட் செய்திதாள் தடைவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மட்டுமல்லாமல் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வேறு பல விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் அடையாளமாக சிகப்பு பென்சில்களைச் செய்தியாளர்கள் ஒடிப்பார்கள். பின்னர் ஒடிக்கப்பட்ட பென்சில்கள் ஒன்றுதிரட்டப்பட்டு உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.
போராட்டத்திற்கு முன்னேரே உங்களைக் கைது செய்வார்கள். அப்புறம் அதுவே ஒரு செய்தியாகி விடும். உடனே அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று மகாதிர் அறிக்கை விடுவார். அப்புறம் அம்னோ, பெர்காசா அனைவரும் அதை இனப்பிரச்சனையாக மாற்றுவர்கள். ஒரு நீதியற்ற அரசாங்கம் எப்படி செயல்படும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு!