டிஏபி: சூதாட்ட வரியைக் கொண்டு மலாய்க்காரர்-அல்லாதாருக்கு உதவலாம்

1-anthonyசூதாட்டம் வழியாகப் பெறும் வருமானத்தைத் தனிக் கணக்கில்  போட்டுவைத்து  அதை  முஸ்லிம்-அல்லாதாரின் நலனுக்கும் கல்விக்கும்  கலாச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடலாம்  என்ற கருத்தை  டிஏபி  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அப்படிச் செய்வதால் “ஒரே கல்லில்  இரண்டு  மாங்காயை வீழ்த்தியவர்கள் ஆவோம்” என்கிறார் சிரம்பான் எம்பி அந்தோனி லொக்.    அது, ஹலால்-அற்ற  வருமானம்  என்ற  முஸ்லிம்களின்  கவலையைப் போக்குவதாகவும்  இருக்கும்  மலாய்க்காரர்- அல்லாதாரின் தாய்மொழிக் கல்விக்கு  உதவுவதாகவும் இருக்கும் என்றாரவர்.

சூதாட்டம் வழி பெறப்படும் வரி  பாவ வரியாகக்  கருதப்படுகிறது.

2008-க்கும் 2012-க்குமிடையில்  சிறப்புக் குலுக்குகளின்வழி பெறப்பட்ட பாவ வரி ரிம6.3 பில்லியன் என லொக்குக்கு கடந்த அக்டோபரில்  நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட  எழுத்துப்பூர்வமான பதில் ஒன்று கூறியது.