ஆறுமாதம் கூடாரங்களில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு விடிவு காலம்

1 dngkilதங்கள்  வீடுகள் இடிந்து  விழலாம்  என்று  அஞ்சியதால்  அவற்றுக்குத்  திரும்பிச் செல்ல  மறுத்து வெளியில் பல மாதங்களாகக் கூடாரங்கள்  அமைத்துக்கொண்டு அவற்றிலே  வாழ்க்கை  நடத்தி  வந்த டிங்கில் தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி  குடியிருப்பாளர்களுக்கு  இப்போது  ஒரு நல்ல  செய்தி  கிடைத்துள்ளது.  கூட்டரசு  அரசாங்கம்  அவர்களுக்குப் புது  வீடுகள் கட்டிக்கொடுக்க  முன்னந்துள்ளது.

1 dengkil2சிலாங்கூர்  அரசு  அடையாளம்  கண்டுள்ள 30 ஏக்கர் நிலத்தில் அவர்களுக்கு  வீடுகள் கட்டித்தர  ஒப்புக்கொண்டு  வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு  கடிதம் கொடுத்திருப்பதாகக்  குடியிருப்பாளர்களின்  முகநூல் பக்கத்தில்  பதிவிடப்பட்டிருக்கிறது.

“இது, அந்த  முன்னாள் தோட்டத்  தொழிலாளர்களின்  போராட்டத்துக்குக்  கிடைத்த  வெற்றி”,  என  அது  குறிப்பிட்டது.

அந் நிலப்பகுதி  400 தரை-வீடுகள்  கட்டுவதற்குப் பொருத்தமான  இடம்  எனக்  கடிதத்தில்  கூறிய  அமைச்சு, அது  சைம்  டார்பி  பெர்ஹாட்டுக்குச்  சொந்தமானது  என்றும் அதைப்  பெற்றுத் தரும் பொறுப்பு  மாநில  அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும்  கூறியது.

1 dengkil 1கடந்த ஜூன் மாதம், பலத்த  ஓசையும்  தொடர்ந்து  அதிர்வுகளும் ஏற்பட்டதை அடுத்து  புளோக் 5-இல் இருந்த  குடியிருப்பாளர்கள்  தங்கள்  வீடுகளை விட்டு  வெளியில்  ஓடினர்.

பின்னர், அடுக்குமாடி  வீட்டின் சுவர்களிலும்  தூண்களிலும் விரிசல்கள்  காணப்பட்டதால்  குடியிருப்பாளர்கள்  தங்கள்  வீடுகளுக்குத்  திரும்பிச் செல்ல  மறுத்து  கூடாரங்களில் தங்கி இருக்க  முடிவு  செய்தனர்.

பெரும்பாலும்  முன்னாள்  தோட்டத்  தொழிலாளர்களான  இக்குடியிருப்பாளர்கள்,  1999-இல் தற்காலிகமாகத்தான் அடுக்குமாடிகளில்  தாங்கள்  குடி அமர்த்தப்பட்டதாகக் கூறுகிறார்கள்.  குறைந்த-விலை  வீடுகளுக்கு  முன்பணம்கூட கட்டி இருப்பதாகவும்  அனால்,   வீடுகள்தான்  இன்னும்  கிடைக்கவில்லை  என்றும்  அவர்கள்  கூறினர்.