துணைப் பிரதமர் முகைதின் யாசின் எழுத்தாளர்கள் அரசாங்க- ஆதரவாளர்கள் என்று கூறியதன்வழி அறிவுஜீவிகளை அவமதித்து விட்டார் என எழுத்தாளர் உதயசங்கர் எஸ்.பி. கூறினார்.
அப்படிக் கருத்துரைப்பது படைப்புத்திறனாளிகளின் அறிவுத்திறத்தையும் அவர்களின் நேர்மையையும் கண்ணியத்தையும் களங்கப்படுத்துவதாகும் என்றாரவர்.
சர்ச்சைக்குரிய இண்டர்லொக் நாவலை மாணவர்-பதிப்பாக திருத்தி வெளியிட ஒரு குழு அமைக்கப்பட்டபோது உதயசங்கரும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தார். முகைதின்தான் அவரை நியமனம் செய்தார்.
அக்குழுவில் இருந்த காரணத்தாலேயே அரசாங்கத்தின் ஆளாகி விடமாட்டேன் என்றாரவர்.
“நான் (பிகேஆரின்) நிக் நஸ்மி நிக் அஹ்மட்(ஸ்ரீ சித்தியா சட்டமன்ற உறுப்பினர்)-டுடன் சேர்ந்து பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்காக, நான் எதிரணி ஆதரவாளன் என்பது பொருளல்ல”.
காவியன் என்னும் அமைப்பின் தலைவருமான உதயசங்கர், எழுத்தாளர்கள் மக்களைப் பிரதிநிதித்து அவர்களின் குறைகளைத் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
“எழுத்தாளர்கள் மக்கள் பக்கம்தான் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் பக்கமோ எதிரணியின் பக்கமோ இருக்கக் கூடாது”, என்றாரவர்.
கேட்கவே சுகமாக இருக்கிறது. சொன்னபடி நடந்து கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!
என்ன தலைவா! உனக்கு தெரியாதா? அந்த குதிரை முட்டைக்கு எங்கே மண்டையிலே ஏற போவுது! முட்டாளிலும் வடிகட்டன முட்டாள் மொஹீடின் யாசின்! இவானாலே நம்ம கல்வி தரம் இன்று சாக்கடையில்!!!