மலேசியாவில் மனித உரிமைகள் கூட்டமைப்புக்குத் தடை

BBC Tamiilகோமங்கோ என்ற மனித உரிமைகள் கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது, மலேசியா கடுமைவாத இஸ்லாமிய குழுக்களுக்கு அடிபணிந்து வருவதைக் காட்டுகிறது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

இவரின் தொலைபேசி பேட்டியை (இங்கே சொடுக்கவும்) பிபிசி தமிழோசை இன்று வெளியிட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணனின் கேள்விகளுக்குப் பதிலளித்த வழக்கறிஞருமான ஆறுமுகம் அரசாங்கத்தின் போக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Aruமேலும், மலேசிய அரசாங்கம் இஸ்லாம் என்கிற போர்வையில் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டை ஒடுக்கும் ஒரு முயற்சியே இந்த நடவடிக்கை என்று கொமாங்கோ அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் மலேசிய மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

கோமங்கோ (COMANGO – Coalition of Malaysian Non-Governmental Organizations) என்பது 54 அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கொண்ட ஒரு அமைப்பாகும். அதில் சுவராம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. கடந்த வருடம் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கோமங்கோ பங்கெடுத்தது. அதில் மலேசியாவில் மனித உரிமை நிலவரம் சார்பாக ஓர் அறிக்கையை சமர்பித்தது என்கிறார் ஆறுமுகம்.

அதோடு ஆசிய வட்டார அரசாங்கங்களுக்கு இடையிலான மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனை கூட்டங்களில் கோமங்கோ கலந்து கொண்டுள்ளது. அதன்வழி ஆசிய வட்டாரத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதைக் கண்காணிக்கவும் தவிர்க்கவும் வழிமுறைகளை பரிந்துரை செய்துவருகிறது.

இப்படி ஆக்கரமான பணிகளில் ஈடுபட்டுவரும் இந்த அமைப்பை மலேசியாவின் உள்துறை அமைச்சு தடை செய்தற்கான காரணம், ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்காகவும் கொமாங்கோ குரல் கொடுத்தது என்றும், அது இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்திய காரணத்தால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தடை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

Comango-images1இது இஸ்லாமுக்கு எதிரான வகையில் உள்ளன என்றும், கோமங்கோ முறையாக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதாலும் அது தடை செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய உள்துறை அமைச்சு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்துக்கும் சர்வதேச மட்டத்துக்கு இதை எடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு உள்துறை அமைச்சு  பெர்சே 2.0-க்குத்  தடை விதித்தபோது தன்னை  ஒரு சங்கமாக சங்கப்  பதிவகத்தில்  பதிவு  செய்துகொள்ளவில்லை  என்பதால்  அது  ஒரு  சட்டவிரோத  அமைப்பு  அறிவித்திருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அதைத்  தள்ளுபடி  செய்தது.