கடந்த ஓராண்டுக் காலத்தில் தீவகற்ப மலேசியாவில் ரயில்கள் தடம்புரளும் எட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஐந்து ஹிஷாமுடின் உசேன் போக்குவரத்து அமைச்சரான பின்னர் ஏற்பட்டவை. எனவே, இச்சம்பவங்களுக்கு அவர்தான் பொறுப்பேற்க வெண்டும் என டிஏபி-இன் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரன் கூறினார்.
“ரயில்கள் தடம்புரள்வதால் காயங்களும் இறப்புகளும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதுடன் போக்குவரத்து வசதியும் பாதிப்புறுகிறது. அதனால் பெரிய இழப்புகள் ஏற்படுகின்றன”, என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த எட்டு சம்பவங்கள்மீதும் உடனடி விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்றும் ரயில் வண்டிகள், தண்டவாளங்கள் ஆகியவற்றை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும், பழுதுபார்க்க வேண்டும் என்றும் ராஜிவ் கேட்டுக்கொண்டார்.
இதெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிய அனுபவம் அவர்களுக்கு உண்டு! ஹிஷாமுடினைப் பொறுப்பேற்கச் சொல்லுகிறீர்களே இது அடுக்குமா! வேறு ஏதாவது , இதை விடப் பெரிய பதவி, கொடுக்க முடியுமா என்று பாருங்கள்!
ரயில் சக்கரத்துக்கு காற்றடிக்கும் வேலையை சரி வர செய்ய தெரியாத ஹிஷாமுடின் உசேனுக்கு வெள்ளை சட்டை,கருப்பு சட்டை அமுலாக்க அதிகாரிகள் சம்மன் தராமல் கிம்பளம் வாங்குகிறார்களா ?