பூச்சோங்கில் எல்ஆர்டி நிர்மாணிப்புக்கு தடங்கலாக இருக்கும் தமிழ்ப்பள்ளி

 

LRT-Puchongஅம்பாங் எல்ஆர்டி நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்  பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் செல்வதிலிருந்து சில முறைகேடான நபர்களால் மீண்டும் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தங்களிடம் நீதிமன்ற உத்தரவும், இதர இலாகாகளின் ஒப்புதல்கள் இருந்தும் பள்ளியின் வாரிய உறுப்பினர்கள் நிமாணிப்பு வேலைகளை மேற்கொள்ள இன்னும் மறுத்து வருகின்றனர் என்று பிரசன்னா குழுமத்தின் திட்ட மேம்பாட்டு இயக்குனர் ஸுல்கிப்ளி முகமட் யுசுப் கூறினார்.

இந்த எதிர்பாராத அமளியில் பல உதவி போலீஸ்காரர்களும் பிரசன்னாவின் மூத்த உதவித் தலைவர் அப்துல் ரஹிம் ஷரிப்பும் காயமுற்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.