பிகேஆர்: அம்னோவின் கிளர்ச்சியை தூண்டிவிடும் செயல்களுக்கு எதிராக நஜிப்பும் ஐஜிபியும் நடவடிக்கை எடுப்பார்களா?

DAP - May 13 again1

நேற்று பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் இன்னொரு மே 13 கலகம் வேண்டுமா என்று மருட்டல் விட்ட அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மற்றும் போலீஸ் படைத் தலைவர் ஆகியோருக்கு பிகேஆர் சவால் விட்டுள்ளது.

“அம்னோவின் இச்செயல் ஆபத்தானது, தீய நோக்கமுடையது மற்றும் அப்பட்டமான சட்டத்தை மீறிய குற்றமாகும்.

“இந்த கலகக்கார அம்னோ கும்பலின் ஓர் அங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான் கலந்து கொண்டிருந்தது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகும்.

“இரத்தம் சிந்த தூண்டி விட்டு நாட்டின் அமைதியை சீர்குலைப்பதுதான் அம்னோவின் கொள்கையா?”, என்று பிகேஆர் உதவித் தலைவர்pkr_n_surendran_01 என்.சுரேந்திரன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

பிரதமர் நஜிப்பி கங்கோங் படுதோல்வியை கிண்டல் செய்தற்கு எதிராக பக்கத்தான் ஆட்சி புரியும் மாநிலத்தில் அம்னோக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கங்கோங் கீரையை எடுத்துக் காட்டி, அரசாங்கம் விலைவாசிகளை குறைப்பதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்களை எவரும் பாராட்டவில்லை என்று பிரதமர் தெரிவித்த வருத்தம் உலகப் பிரசித்த பெற்ற செய்தியாக, கேலியாக மாறிவிட்டது.

“இந்த மருட்டலை விட்டதன் மூலம் அவர்கள் புரிந்துள்ள குற்றங்களில் வன்செயல்களில் ஈடுபட தூண்டுதல், கிரிமினல் அச்சுறுத்தல் (பீனல் சட்டம் செக்சன் 503) மற்றும் பொதுமக்கள் மற்றும் சொத்துகளுக்கு இழப்பு அல்லது சேதம் விளைவித்தல் (பீனல் சட்டம் செக்சன் 505) ஆகியவை அடங்கும்.

“இன்னும் கடுமையானது, பினாங்கு அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகும். அச்செயலகள் பீனல் சட்டம் செக்சன் 124Bக்கு முரணானதாகும். அக்குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டணை உண்டு”, என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.

 

 

 

TAGS: