“அல்லா” முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது, அகோங் ஆணை

 

Agong - Allah - decree“அல்லா” என்றா சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது என்று பேரரசர் இன்று ஆணை பிறப்பித்தார்.

அச்சொல்லை இதர சமயங்களைப் பின்பற்றுகிறவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்ததாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

அச்சொல் பயன்படுத்துவது குறித்து தேசிய ஃபாட்வா மன்றம் 1986 இல் முடிவெடுத்துள்ளது. அது மதிக்கப்பட வேண்டும் என்று பேரரசர் கூறுகிறார்.

இச்சொல் குறித்து முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவால் எழுந்துள்ள சர்ச்சையில் நாட்டின் பேரரசர் தலையிடுவது இதுவே முதல் முறையாகும்.

இன்று கெடா அலோஸ்டாரில், கெடா சுல்தான் ஆட்சிக்காவலர் மன்றத்தின் தலைவர் துங்கு அனுவார் சுல்தான் பாட்லிஷா, பேரரசர் பிறந்த நாள் சடங்கு ஒன்றில் இந்த ஆணையை வாசித்தார்.

பேரரசர் கெடா மாநிலத்தின் தற்போதைய சுல்தானும் ஆவார்.

 

 

 

 

 

 

TAGS: