காடிர்: பிரதமர் மாற வேண்டும்; இல்லையேல் மாற்றப்படுவார்

kadirபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  போக்கை  மாற்றிக்கொண்டு  மக்களின்  சுமையைக்  குறைக்க  சரியான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்,  தவறினால்  பிஎன்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  கவிழ்ந்து  விடும்  என  அப்துல்   காடிர்  ஜாசின்  தம்  வலைப்பதிவில்  எச்சரித்துள்ளார்.

பெரித்தா  பப்ளிஷிங்  சென்,  பெர்ஹாட்டில்  தலைமை  செய்தியாசிரியராக  உள்ள காடிர்,  நஜிப்பின்  எதிர்கால தலைமைத்துவ  நிலவரம்  மூன்று  விதமாக  அமையலாம்  என்றார்.

“ஒன்று  பிரதமர்  தம்மை  மாற்றிக்கொண்டு  மக்களின்  துயர்தீர்க்க  உதவலாம்.  இரண்டு,  அவர்  மாறாவிட்டால்  மாற்றப்படலாம்.  மூன்றாவதாக,  எந்த  மாற்றமின்றி  அப்படியே  இருந்தால்  பிஎன்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  தூக்கி  எறியப்படலாம்”,  என்றார்.
நஜிப்  பிரதமராக  வந்த  பிறகு,  வேலையில்லாதிருக்கும்  பூமிபுத்ரா  பட்டதாரிகளின்  எண்ணிக்கை 30 விழுக்காடு  எகிறியுள்ளது.
ஆண்டு  இறுதியில்  ஆயிரக்கணக்கான  மலேசியர்கள்  வெள்ளத்தால்  பதிக்கப்பட்டு  பரிதவித்தபோது  அமைச்சர்களில்  பாதிப்பேருக்குமேல்  வெளிநாட்டுப்  பயணங்கள்  சென்றதை  நினைத்தால்  “வெறுப்பாக  இருக்கிறது”  என்றாரவர்.

அவர்கள்  எதைப்  பற்றியும்  கவலைப்படுவதில்லையா  என  காடிர்  வினவினார்.